சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 பேர் வங்கி கணக்கில் ரூ.4.66 லட்சம் அபேஸ்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சேலம்: இருவரது வங்கி கணக்கில் இருந்து, 4.66 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், மல்லூர், மூக்குத்திப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 53. கடந்த, ஜூலை, 13ல் இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தி பேசினார். நாச்சிமுத்துவுக்கு சரியாக காது கேட்காததால், அருகில் இருந்த மகளிடம் கொடுத்து பேச அறிவுறுத்தினார். அவரிடம்

சேலம்: இருவரது வங்கி கணக்கில் இருந்து, 4.66 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், மல்லூர், மூக்குத்திப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 53. கடந்த, ஜூலை, 13ல் இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தி பேசினார். நாச்சிமுத்துவுக்கு சரியாக காது கேட்காததால், அருகில் இருந்த மகளிடம் கொடுத்து பேச அறிவுறுத்தினார். அவரிடம் பேசிய மர்ம நபர், அரசின் முதியோர் உதவித்தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க தகவல் அளிக்கும்படி கேட்டுள்ளார். அதை நம்பி தகவல் அளித்த சிறிது நேரத்தில், நாச்சிமுத்து வங்கி கணக்கில் இருந்து, 17 தவணையாக, 3.96 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்து நாச்சிமுத்து புகார்படி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் சேலம், சீலநாயக்கன்பட்டி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30. இவரது மொபைல் போனுக்கு, கடந்த ஜூன், 21ல் குறுந்தகவல் வந்தது. அதில், 'எஸ்.பி.ஐ., வங்கி கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கணக்கை தொடர, தங்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதற்கான, 'லிங்க்'கை பதிவிறக்கி, அதில் விபரங்களை தெரிவிக்கவும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவரும் விபரங்களை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில், சதீஷ்குமார் வங்கி கணக்கில், 70 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது. சதீஷ்குமார், கடந்த, 5ல் அளித்த புகார்படி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X