பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம்; சத்தியமங்கலம் சகோதரர்கள் சாதனை

Added : செப் 10, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்துள்ளனர்.சத்தியமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த முத்துராம், தேவகி தம்பதியரின் மகன்கள் சுபாஷ், 13, பரத், 11. முத்துராம் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராகவும், தேவகி வீட்டில் தையல் தொழிலும் மேற்கொண்டு வருகின்றனர். சுபாஷ் தனியார் பள்ளியில்

புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்துள்ளனர்.
சத்தியமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த முத்துராம், தேவகி தம்பதியரின் மகன்கள் சுபாஷ், 13, பரத், 11. முத்துராம் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராகவும், தேவகி வீட்டில் தையல் தொழிலும் மேற்கொண்டு வருகின்றனர். சுபாஷ் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பும், பரத் ஆறாம் வகுப்பும் படிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்கரணம் போட்டு இருவரும் உலக சாதனை படைத்துள்ளனர். இவர்களது சாதனையை, கலாம் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் அங்கீகரித்து, சாதனை படைத்ததற்கான சான்றிதழ், பதக்கங்கள் வழங்கியுள்ளனர். சுபாஷ் ஒரு நிமிடத்தில், 100 தோப்புக்காரணம் தரையில் நின்றபடியும், பரத் ஸ்டூலின் மீது நின்றபடி ஒரு நிமிடத்தில், 93 தோப்புக்கரணம் போட்டு அசத்தியுள்ளனர். சகோதரர்கள் கூறுகையில், 'நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தோப்புக்கரணம் போடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் உடலில் ரத்த ஓட்டம், காற்றோட்டம், வெப்ப ஓட்டம் சீராகும். நினைவாற்றல் அதிரித்து, உடல் வலிமை பெறும். மேலும் பல்வேறு சாதனைகள் படைப்போம்' என்றனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X