கரூரில் விநாயகர் சிலை உடைப்பு: அண்ணாமலை கடும் கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் விநாயகர் சிலை உடைப்பு: அண்ணாமலை கடும் கண்டனம்

Added : செப் 10, 2021
Share
கரூர்: கரூரில் போலீசார், இந்து முன்னணியர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு விநாயகர் சிலை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும், இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை

கரூர்: கரூரில் போலீசார், இந்து முன்னணியர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு விநாயகர் சிலை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும், இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி இந்து முன்னணி சார்பில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன், 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து வ.உ.சி தெருவில் மற்றொரு விநாயகர் சிலை வைப்பதற்காக, சரக்கு வாகனத்தில் எடுத்து சென்றனர். தகவல் அறிந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் செந்தூரபாண்டியன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி, சிலையை பறிமுதல் செய்ய முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், போலீஸ் ஜீப்பில் சிலையை ஏற்ற முற்பட்ட போது, விநாயகர் சிலையின் தும்பிக்கை உடைந்தது. பின்னர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன் உள்ள சிலையை போலீசார் அப்புறப்படுத்தி, கோவிலுக்குள் வைத்தனர்.

இது குறித்து, இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: வ.உ.சி. தெருவில் சரக்கு வாகனத்தில் விநாயகர் சிலை இருந்தது. எங்களிடமிருந்து சிலையை, அத்துமீறி போலீசார் பறிமுதல் செய்தனர். நள்ளிரவில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை திறந்து, விநாயகர் சிலை வைத்துள்ளனர். அப்போது காலில் அணிந்திருந்த பூட்ஸூடன், போலீசார் சென்றுள்ளனர். இது கோவிலை அவமதிக்கும் செயலாகும். எனவே, போலீசார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தன் டுவிட்டரில், 'கரூரில், விநாயகர் சிலையை உடைத்து காவல்துறை அத்துமீறல்!காவல்துறை, கண்ணியம் பறந்தது காற்றில். அனைத்து மதங்களையும் மாண்புடன் மதிக்கும், பா.ஜ.,வில் உள்ளது மதச்சார்பின்மை. ஒரு சாராரை வாழ்த்தி @ட்டுண்tச்டூடிண அவர்கள் இந்துக்களை தாழ்த்துவதா மதச்சார்பின்மை? இதுவா மதநல்லிணக்கம் என பதிவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X