400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்

Added : செப் 10, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 400 ஆண்டுகள் பழமையான இரண்டு அங்குல உயர சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி, மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பையூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவிந்தசாமி என்பவர் வீட்டில், சுடுமண் விநாயகர் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 400 ஆண்டுகள் பழமையான இரண்டு அங்குல உயர சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி, மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பையூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவிந்தசாமி என்பவர் வீட்டில், சுடுமண் விநாயகர் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த சுடுமண் விநாயகர் சிற்பம், 400 ஆண்டுகள் பழமையானது. இரண்டு அங்குல உயரமே உள்ள இச்சிலையின் தலை உச்சியில், குடை சொருகுவதற்கான துளை உள்ளது. துதிக்கை வலம்புரியாக உள்ளது. அடிப்பகுதி குழிவாக உள்ளது. சுடுமண் சிற்பம் என்பது அரிதான ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல இடங்களில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இந்த சுடுமண் விநாயகர் சிற்பம், இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், வரலாற்றுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ஆசிரியர் ரவி, தொல்லியல் ஆய்வாளர் சுகவனம் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X