தலையில் புத்தக பையுடன் இடுப்பளவு தண்ணீரில் பள்ளி செல்லும் மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலையில் புத்தக பையுடன் இடுப்பளவு தண்ணீரில் பள்ளி செல்லும் மாணவர்கள்

Added : செப் 10, 2021
Share
சோளிங்கர்: சோளிங்கர் அருகே, தலையில் புத்தக பையுடன் இடுப்பளவு தண்ணீரில், பள்ளிக்கு மாணவர்கள் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த நந்திமங்கலத்தில், 3,000 பேர் வசிக்கின்றனர். இங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 3 கி.மீ., தூரத்தில் உள்ள கட்டாரிகுப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்காக, தினமும் நந்திமங்கலம் ஓடை

சோளிங்கர்: சோளிங்கர் அருகே, தலையில் புத்தக பையுடன் இடுப்பளவு தண்ணீரில், பள்ளிக்கு மாணவர்கள் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த நந்திமங்கலத்தில், 3,000 பேர் வசிக்கின்றனர். இங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 3 கி.மீ., தூரத்தில் உள்ள கட்டாரிகுப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்காக, தினமும் நந்திமங்கலம் ஓடை வழியாக சைக்கிளில் சென்று வந்தனர். ஆந்திரா மாநிலம், கலசகுண்டா அணை திறக்கப்பட்டதால் பொன்னை, பாலாற்றில் அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் நந்திமங்கலம் ஓடையில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது. இதனால் மாணவ, மாணவியர் புத்தக பையை தலையில் வைத்துக் கொண்டு, மார்பளவு தண்ணீரில் ஓடையை கடந்து பள்ளி செல்கின்றனர். அப்பகுதி இளைஞர்கள், இவர்களை பாதுகாப்பாக தண்ணீரில் அழைத்துச் சென்று வருகின்றனர். இது குறித்து நந்திமங்கலம் கிராம தலைவர் மணிவாசகம், 90, கூறியதாவது: பாலாற்றில் வெள்ளம் வந்தால் நந்திமங்கலம் ஓடையில், 20 நாட்களுக்கு தண்ணீர் வரும். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, நந்திமங்கலம் ஓடையில் தரைப்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X