பொது செய்தி

தமிழ்நாடு

7 ஆசிரியர், 4 மாணவர்களுக்கு 'கொரோனா': 4 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏழு ஆசிரியர்கள், நான்கு மாணவியர் என, 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, நான்கு நாட்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த, 1 முதல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், கொரோனா பரிசோதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏழு ஆசிரியர்கள், நான்கு மாணவியர் என, 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, நான்கு நாட்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த, 1 முதல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு சோதனை செய்யப்பட்டதில், மேலாரணி அரசு பள்ளி ஊழியர் ஒருவர், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இருவர், வாழ்விடாந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர். சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இருவர், செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், வழுதலங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் இருவர், மேல் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர், பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் என மொத்தம், 11 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஆசிரியர், ஒரு மாணவி என ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X