பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் விற்பனை கன ஜோர்

Added : செப் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: கொரோனா ஊரடங்கால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய, சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கோவில்கள் மட்டுமின்றி தெருக்களிலும், முக்கிய பகுதிகளிலும் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள்

நாமக்கல்: கொரோனா ஊரடங்கால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய, சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கோவில்கள் மட்டுமின்றி தெருக்களிலும், முக்கிய பகுதிகளிலும் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள் சிறப்பு பூஜை செய்து மக்கள் வழிபாடு நடத்துவர். தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால், பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. இருப்பினும் சிறிய விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் வாங்கி சென்று வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தலாம். நீர் நிலைகளில் கரைக்கலாம் என தெரிவித்துள்ளது. நாமக்கல் நகரில் கடைவீதி, பிரதான சாலை, சந்தைபேட்டை புதூர், ஆஞ்சநேயர் கோவில் வீதி உள்ளிட்ட பகுதியில் சாலையோரம் விற்கப்படும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். 20 ரூபாயில் இருந்து, 3,500 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X