மண்வள வேளாண்மை: விவசாயிகளுக்குபயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்வள வேளாண்மை: விவசாயிகளுக்குபயிற்சி

Added : செப் 10, 2021
Share
ராசிபுரம்: ராசிபுரம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை, உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ், மண்வள மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி தலைமையில் மலையாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மண்பரிசோதனை செய்வதன் பயன்கள் குறித்து விளக்கினர். உதவி

ராசிபுரம்: ராசிபுரம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை, உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ், மண்வள மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி தலைமையில் மலையாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மண்பரிசோதனை செய்வதன் பயன்கள் குறித்து விளக்கினர். உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா உயிர் உரங்கள் பயன்பாடு, பயிர் காப்பீடு செய்தல் பற்றி எடுத்துரைத்தார். பிஜிபி வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் புனிதா, மண்பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தன்மை அறிதல், களர் உவர் நிலங்களை சீர்திருத்தம் செய்தல், கோடை உழவு, நிலப்போர்வை இடுதல் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X