பொது செய்தி

தமிழ்நாடு

'மோடி அரசுக்கு எதிராக தமிழக அரசு எதை செய்தாலும், உங்கள் கட்சி பாராட்டுவது கட்சியின் நலன் கருதி மட்டுமே...'

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு இந்தியருக்கும் எதிரானது.- காங்., பெண் எம்.பி., ஜோதிமணி'மோடி அரசுக்கு எதிராக தமிழக அரசு எதை செய்தாலும், முதலில் பாராட்டுவது உங்கள் கட்சி தான். அந்த வகையில் இந்த பாராட்டு நாட்டின் நலன் கருதியல்ல; உங்கள் கட்சியின்
பேச்சு_பேட்டி_அறிக்கை, ஜோதிமணி, காங்கிரஸ்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு இந்தியருக்கும் எதிரானது.
- காங்., பெண் எம்.பி., ஜோதிமணி


'மோடி அரசுக்கு எதிராக தமிழக அரசு எதை செய்தாலும், முதலில் பாராட்டுவது உங்கள் கட்சி தான். அந்த வகையில் இந்த பாராட்டு நாட்டின் நலன் கருதியல்ல; உங்கள் கட்சியின் நலன் கருதி மட்டுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கைஅகதிகளாக புகலிடம் தேடி வருவோரை, மத அடிப்படையில் பாகுபடுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்க்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் வரவேற்பிற்குரியது.
- மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன்


'வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுகளை அள்ள, தி.மு.க., கூட்டணி தயாராகிவிட்டது போலும்...' எனக், கூறத் துாண்டும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கைlatest tamil news


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் என்னுடன் சில விவாதங்களில் பங்கேற்றுள்ள போது, இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் இல்லை; தி.மு.க., - எம்.பி., என கூறியுள்ளேன். அப்போது மறுத்த, இப்போது நீதிமன்றத்தில் தி.மு.க., - எம்.பி., தான் எனக் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே இனிமேல் அவர் தி.மு.க., பிரதிநிதி தான்.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'எப்படியோ உங்களின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் வாயால் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்...' எனக், கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கைகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக சமூக செயல்பாட்டாளர்கள் எந்த அளவு போராடினர் என்பதை அறிவோம். இன்று ஒற்றை தீர்மானத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஒற்றை நம்பிக்கை ஸ்டாலின் தான். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.
- தி.மு.க., மகளிரணி இணைச் செயலர் சல்மா


'போராடியவர்கள் மீதான வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இப்போது சட்டமும் தள்ளுபடியாகி விட்டது. அனுபவியுங்கள்...' எனக், கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி இணைச் செயலர் சல்மா அறிக்கைகடைகளில் பணியாற்றுவோருக்கு இருக்கை வசதி அளிக்க வேண்டும் என, 2017லேயே கேரள அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. அதுபோன்ற சட்டம், தமிழகத்தில் வேண்டும் என்ற எங்களின் தொடர் கோரிக்கையை நிறைவேற்றியுள்ள முதல்வருக்கு நன்றி.
- சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன்


'உண்மையில் வரவேற்கக் கூடிய ஒன்று தான். எனினும், வியாபார நேரங்களிலும் இருக்கையில் அமர்ந்திருந்தால், வியாபாரம் படுத்து விடுமே...' எனக், கூறத் தோன்றும் வகையில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
11-செப்-202102:54:18 IST Report Abuse
Aarkay எக்கோவ் நாங்களும் இந்திய குடிமக்கள்தான். நாங்கள் இந்த சட்டம் எங்களுக்கெதிரானதாய் நினைக்கவில்லை. இங்கிருப்பவர்களின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாத நிலையில், ரொஹிங்கியாக்களுக்கும், தாலிபான்களுக்கும் இங்கு அனுமதி இல்லை என்பதை நாங்கள் வரவேற்கிறோம். அகதிகளை அனுமதித்த ஐரோப்பிய நாடுகள் இன்று வீட்டிற்குள் ஒட்டகம் தலைமட்டும் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு வீட்டின் சொந்தக்காரனையே வெளியே அனுப்பி ஆக்கிரமித்த நிலைமை எங்களுக்கு வேண்டாம். வேண்டுமானால் அவர்களை உங்கள் வீடுகளில் வைத்து கொஞ்சிக்குலாவுங்கள்.
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
10-செப்-202122:51:15 IST Report Abuse
Arachi சட்டத்தை மதிக்கவேண்டும். மக்களின் எதிர்ப்பு இருக்குமானால் மக்களுக்காக மாநில அரசு தான் எதிர்த்து தீர்மானம் போடமுடியும்.ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1967 ல் மாணவர்கள் கையில் எடுத்தார்கள். மாற்றம் ஏற்பட்டது.CAA NEET இவற்றிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. மக்களால் அரசு மக்களுக்காக அரசு. சர்வாதிகார ஆட்சி தேவை இல்லை. திமுக என்ன செய்யமுடியும் மக்களின் எதிர்ப்பை பிரதிபலிக்கும்.ஹிட்லரும் வீழ்ந்தார் என்பது சரித்திரம்.மத ரீதியாக மொழி ரீதியாக சாதி ரீதியாக பிரிப்பது யார்? தாய் பிள்ளைககளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை யார் பிரிப்பது. இந்த அரசு மாணவர்களை தவறான வழியில் நடத்தாது.இந்த Corona சமயத்தில் NEET ஐ தள்ளி வையுங்கள் என்று கேட்டால் அதுக்கு செவி கொடுக்காத இரக்கமற்றவர்கள் தானே நீங்கள் .
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11-செப்-202122:17:57 IST Report Abuse
Aarkayஇந்தி எதிர்ப்பை கையில் எடுத்து யாரையும் உருப்படாமல் செய்தாகிவிட்டது. கிணற்றுத்தவளைகளாகிப்போனோம். அந்நிய மொழியை ஏற்போம் நமக்கு நாடு முழுதும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் தேசிய மொழியை வெறுப்போம். எழுத்தறிவே இல்லாதவர்களால், மூளை சலவை செய்யப்பட்டோம். சாதியை வைத்து அரசியல் செய்வது யார்? உலகிற்கே தெரியும். தாயாய், பிள்ளையாய் காலமெல்லாம் எப்போது உள்நாட்டிலேயே குண்டுகள் வைத்து, உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தார்களோ அப்போதே போயிற்று. அது சரித்திரம். இன்று எங்கள் தாய்நாட்டிற்கெதிராய் வாலை ஆட்ட நினைத்தால், ஓட்ட நறுக்கிவிடுவோம்...
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
10-செப்-202122:48:18 IST Report Abuse
r ravichandran நீட் தேர்வு மறறும் CAA குறித்து எதிர்ப்பு தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்ற பட்டதால் என்ன ஆகிவிடும். இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம். இந்த தீர்மானங்களுக்கு 10 பைசாவிற்கு இருக்கும் மதிப்பு தான். செல்லாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X