பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு மையங்களில் நீட் தேர்வு

Added : செப் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வரும், 12ல் ஆறு மையங்களில், 3,853 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ராசிபுரம் அடுத்த பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில், 900 பேர், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளியில், 600 பேர், குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியில், 840 பேர், நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லூரியில், 600 பேர், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., அக்ஷரா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வரும், 12ல் ஆறு மையங்களில், 3,853 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ராசிபுரம் அடுத்த பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில், 900 பேர், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளியில், 600 பேர், குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியில், 840 பேர், நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லூரியில், 600 பேர், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., அக்ஷரா அகாதெமி பள்ளியில், 540 பேர், பரமத்தி நவோதயா அகாதெமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 373 பேர் என ஆறு மையங்களில் மொத்தம், 3,853 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு மதியம், 2:00 மணிக்கு துவங்கி மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது. இருப்பினும் முன்னதாகவே மாணவ, மாணவியர் தேர்வு மையங்களுக்கு உரிய நுழைவு சீட்டுடன் சென்று விட வேண்டும். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே, ஒவ்வொரு மாணவரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். நீட் தேர்வையொட்டி, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ப.வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேர்வு துவங்கும் நேரத்தை கடந்த பின், வரும் மாணவ, மாணவியர் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படவுள்ளது என, தேசிய தேர்வு முகமை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X