பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 301 மொபைல்போன்கள் மீட்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன, 301 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும் தவறி விடப்பட்ட மொலை போன்கள் குறித்து போலீஸ் ஸ்டேஷன்களில், 585 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி, தனிப்படைகள் அமைக்கப்பட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன, 301 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும் தவறி விடப்பட்ட மொலை போன்கள் குறித்து போலீஸ் ஸ்டேஷன்களில், 585 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி, தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொபைல் போன்கள் மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 301 மொபைல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் மீட்கப்பட்ட மொபைல்போன்களை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2019 முதல் 2021 வரை தவறிவிடப்பட்ட, 585 மொபைல் போன்களில், 301 மொபைல்களை ஏ.டி.எஸ்.பி., செல்லபாண்டின், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மீட்டுள்ளனர். அதன் மதிப்பு, 60 லட்சம் ரூபாய். சைபர் கிரைம் குறித்து பொதுமக்கள், 155260 என்ற எண்ணிலும், குழந்தை திருமணம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளை தடுக்க, 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்கான ஏற்படும் கொடுமைகளை தடுக்க, 181 என்ற எண்களிலூம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X