பொது செய்தி

தமிழ்நாடு

நித்யானந்தா சீடர்கள் போலீசில் புகார்

Added : செப் 10, 2021
Share
Advertisement
ராசிபுரம்: நித்தியானந்தா சீடர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி அத்தாயி, 53. இவர் கடந்த ஐந்து ஆண்டாக நித்தியானந்தர் ஆசிரமத்தில் வசித்து வந்தார். ராமசாமி பலமுறை ஆசிரமத்திற்கு நேரில் சென்று, அத்தாயியை பார்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அத்தாயியை ஆசிரமத்தில் உள்ளவர்கள் பார்க்கவிடவில்லை.

ராசிபுரம்: நித்தியானந்தா சீடர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி அத்தாயி, 53. இவர் கடந்த ஐந்து ஆண்டாக நித்தியானந்தர் ஆசிரமத்தில் வசித்து வந்தார். ராமசாமி பலமுறை ஆசிரமத்திற்கு நேரில் சென்று, அத்தாயியை பார்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அத்தாயியை ஆசிரமத்தில் உள்ளவர்கள் பார்க்கவிடவில்லை. இந்நிலையில், வங்கியில் கடன் உள்ளதாகவும் அத்தாயி வந்து கையெழுத்து போட்டால் மட்டுமே கடன் பிரச்னை முடியும் என, நித்தியானந்தா சீடர்களிடம் ராமசாமி கூறியுள்ளார். அத்தாயி வந்து கையெழுத்து போட்டு விட்டு சென்றால் போதும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து கடந்த, 6ல் பெங்களூரில் இருந்து அத்தாயி உடன் ஐந்து சீடர்கள் அய்யம்பாளையம் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், சீடர்களை சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், அத்தாயியை உறவினர்கள் ராமசாமி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் அத்தாயி உறவினர்கள், நித்தியானந்தர் சீடர்கள் மீது நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளனர். அதேபோல், நித்தியானந்தர் சீடர்கள் அத்தாயி உறவினர்கள் மீது, ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X