போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி

Added : செப் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் நகரில் வாகன போக்குவரத்து நெரிசலால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நாமக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து துறையூர், திருச்சி, கரூர், மோகனூர், திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், சேலம், சேந்தமங்கலம் உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் மற்றும் சர்வீஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தனியார் பஸ்களும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்நிலையில்,

நாமக்கல்: நாமக்கல் நகரில் வாகன போக்குவரத்து நெரிசலால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


நாமக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து துறையூர், திருச்சி, கரூர், மோகனூர், திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், சேலம், சேந்தமங்கலம் உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் மற்றும் சர்வீஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தனியார் பஸ்களும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் முன் சாக்கடை பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு கரூர், மதுரை, ப.வேலூர் மார்க்கமாக சென்று வரும் பஸ்கள் சந்தப்பேட்டை புதூரில் இருந்து கோட்டை சாலை, உழவர் சந்தை அருகே உள்ள பூங்கா சாலை வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், நாமக்கல் பூங்கா சாலை வழியாக வாகனங்கள் வருவதால் மணிக்கூண்டு பகுதியில் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பஸ்களை தவிர மற்ற கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், அவசர கதிக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றன. எனவே பரமத்தி சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாக்கடை மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X