தமிழ்நாடு

உள்ளாட்சி தரம் உயர்வால் 14,643 பேர் பணி இழப்பு? கலங்கும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கரூர்: மாநகராட்சி, நகராட்சி தரம் உயர்வால், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள, 14 ஆயிரத்து, 643 பணியாளர்கள் வேலை இழக்கக்கூடும் என தெரிகிறது.கரூர் நகராட்சியை ஒட்டியுள்ள பஞ்சாயத்துகள், பேரூராட்சி ஆகியவற்றை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளை இணைத்து புகழூர், பள்ளப்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, கரூர்

கரூர்: மாநகராட்சி, நகராட்சி தரம் உயர்வால், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள, 14 ஆயிரத்து, 643 பணியாளர்கள் வேலை இழக்கக்கூடும் என தெரிகிறது.
கரூர் நகராட்சியை ஒட்டியுள்ள பஞ்சாயத்துகள், பேரூராட்சி ஆகியவற்றை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளை இணைத்து புகழூர், பள்ளப்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எம்.பஞ்சமாதேவி, காதப்பாறை, ஆத்தூர் புலாம்பாளையம், ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, ஏமூர், மேலப்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளில் மொத்தம், 11 ஆயிரத்து, 957 பணியாளர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளனர். புகழுர் நகராட்சியுடன் இணைக்கப்படும் திருக்காடுதுறை, கோம்புபாளையம், நஞ்சை புகழூரில் உள்ள பஞ்சாயத்துகளில், 1,908 பேர், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளனர். பள்ளப்பட்டி நகராட்சியுடன் இணைக்கும் லிங்கமநாயக்கன்பட்டியில், 778 பணியாளர்கள் உள்ளனர். இந்த பஞ்சாயத்துகளில் மொத்தமாக, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 14 ஆயிரத்து, 643 பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதால் கலக்கத்தில் உள்ளனர்.

இது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது: கரூர் நகராட்சி அருகில் உள்ள காதப்பாறை, ஆண்டாங்கோவில் மேற்கு, கிழக்கு, மேலப்பாளையம் ஆகிய பகுதிகள் முற்றிலும் நகரமயமாகிவிட்டது. இதில், சில பகுதிகள் மட்டுமே கிராமமாக இருப்பதால், 100 நாள் திட்ட பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாகும். ஆனால், எம்.பஞ்சமாதேவி, ஆத்தூர்புலாம்பாளையம், ஏமூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் கிராம பகுதியாகும். இங்கு, 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்தவர்களில் தற்போது, 69 சதவீதம் பணியாற்றி வருகின்றனர். புகழுர் நகராட்சியுடன் இணைக்கப்படும் மூன்று பஞ்சாயத்துகளும், பள்ளப்பட்டியுடன் இணைக்கப்படும், லிங்கமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஆகியவற்றில் குக்கிராமங்கள் அடங்கியுள்ளன. இதில் பதிவு செய்தவர்களில், 69 சதவீதம் தொடர்ந்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். புகழூர், பள்ளப்பட்டி இணைக்கும் பஞ்சாயத்துகள் விவசாய மட்டுமே பிரதான தொழில் இருப்பதால், வேறு வேலை கிடைப்பது கடினமாகும். கொரோனா காலத்திலும், 100 நாள் வேலை திட்டத்தால், இவர்கள் பசி இல்லாமல் காப்பாற்றியது. இந்த பஞ்சாயத்துகளுக்கு, 2025 வரை உள்ளாட்சிக்கு பதவி காலம் இருப்பதால், உடனடியாக பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X