50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: கரூர் கலெக்டர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: கரூர் கலெக்டர் தகவல்

Added : செப் 10, 2021
Share
கரூர்: ''கரூர் மாவட்டத்தில் வரும், 12ல் மெகா தடுப்பூசி முகாம், 540 இடங்களில் நடத்தப்பட்டு, 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என, கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும், 12ல் கரூர் மாவட்டத்தில், 540

கரூர்: ''கரூர் மாவட்டத்தில் வரும், 12ல் மெகா தடுப்பூசி முகாம், 540 இடங்களில் நடத்தப்பட்டு, 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என, கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.


கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும், 12ல் கரூர் மாவட்டத்தில், 540 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில், 420 ஊரக பகுதிகள், 120 நகர பகுதியில் முகாம் நடத்தப்படும். இந்த மையங்களில், 50, ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. ஊரக பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் சுய உதவி குழு மூலம், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்த விபரம் இன்றும், நாளையும் சேகரிக்கப்படும். மூன்றாவது அலை சாத்தியக்கூறுகள் அதிகம் என்று சொல்லும் நிலையில், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என, தவறாக வதந்தி பரப்பி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X