பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் உழவர் சந்தையில் 15.65 டன் காய்கறி விற்பனை

Added : செப் 10, 2021
Share
Advertisement
கரூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி நேற்று, 15.65 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தை மூடப்பட்டிருந்தது. பல மைதானங்களில், வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். கடந்து இரண்டு மாதங்களுக்கு முன், ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், கரூர் உழவர் சந்தை செயல்பட அனுமதி

கரூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி நேற்று, 15.65 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தை மூடப்பட்டிருந்தது. பல மைதானங்களில், வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். கடந்து இரண்டு மாதங்களுக்கு முன், ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், கரூர் உழவர் சந்தை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் என்பதால் நேற்று உழவர் சந்தையில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. தக்காளி கிலோ, 16 ரூபாய், பெல்லாரி வெங்காயம், 30, சின்ன வெங்காயம், 30, வெண்டை, 25, புடலங்காய், 20, பீர்க்கங்காய், 24, முள்ளங்கி, 20, பாகற்காய், 28, கத்தரிகாய், 20, முருங்கை, 30, கொத்தமல்லி, 60, கேரட், 75, முட்டைகோஸ், 30, உருளைகிழங்கு, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில், 4.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15.65 டன் காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனையானது. 98 விவசாயிகள், 3,135 நுகர்வோரிடம் காய்கறிகளை விற்பனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X