பெட்ரோல் விலை குறைக்க கோரி பி.எம்.எஸ்., சங்கம் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை குறைக்க கோரி பி.எம்.எஸ்., சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : செப் 10, 2021
Share
கரூர்: பெட்ரோல் விலையை குறைக்க கோரி, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன் பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் டீசல், பெட்ரோல் விலை குறைக்க வேண்டும். பொருட்களில் உற்பத்தி விலை, ஜி.எஸ்.டி., வரி ஆகியவற்றை அட்டையில் குறிப்பிட வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை

கரூர்: பெட்ரோல் விலையை குறைக்க கோரி, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன் பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் டீசல், பெட்ரோல் விலை குறைக்க வேண்டும். பொருட்களில் உற்பத்தி விலை, ஜி.எஸ்.டி., வரி ஆகியவற்றை அட்டையில் குறிப்பிட வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரப்புக்குள் கொண்டுவர வேண்டும். மாவட்ட தொழிலாளர் நலவாரியம், தொழிலாளர்களின் இயற்கை, விபத்து மரண உதவி தொகையை விரைந்து வழங்க வேண்டும். மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். தமிழக மின்வாரிய தொழிலாளர்களுக்கு நிறுத்திவைத்துள்ள அகவிலைபடி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X