பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர், மாரியம்மன், பகவதியம்மன் பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., மாகாளிபட்டியில் விநாயகர், மாரியம்மன், பகவதியம்மன், பாலதண்டாயுதபாணி, கன்னிமார் அம்மன் சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். காவிரி நதியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்களை தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் பக்தர்கள்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., மாகாளிபட்டியில் விநாயகர், மாரியம்மன், பகவதியம்மன், பாலதண்டாயுதபாணி, கன்னிமார் அம்மன் சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். காவிரி நதியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்களை தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் பால் குடம், தீர்த்த குடங்களை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முதல்கால பூஜையில் மஹா கணபதி ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதணை காட்டப்பட்டது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன், பகவதியம்மன், பாலதண்டாயுதபாணி, கன்னிமார் அம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரதாசம் வழங்கப்பட்டது. விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியாளர்கள், நன்கொடையாளர்கள் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X