12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021
Share
வெள்ளி முதல் வியாழன் வரை ( 10.9.2021 - 16.9.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் செவ்வாய், சூரியன், சுக்கிரன் சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு நலம் அளிக்கும்அசுவினி: விட்டுக் கொடுக்கும் மனதுடன் மற்றவர்களை நெகிழ வைப்பீர்கள். பணிகளை எளிதாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத வகையில் செலவுகள்
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை ( 10.9.2021 - 16.9.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


செவ்வாய், சூரியன், சுக்கிரன் சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு நலம் அளிக்கும்

அசுவினி: விட்டுக் கொடுக்கும் மனதுடன் மற்றவர்களை நெகிழ வைப்பீர்கள். பணிகளை எளிதாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத வகையில் செலவுகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

பரணி: பிள்ளைகளின் செயல்பாடுகளால் கவுரவம் உண்டாகும். அரசு வழியில் உதவி பெற சற்று அலைய வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் தாமதம் நீங்கி நல்ல முடிவு கிடைக்கும்.

கார்த்திகை1: வியாபார வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளைச் செய்து வெற்றியடைவீர்கள். புது முயற்சிகளில் ஈடுபடும் எண்ணம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 12.9.2021 காலை 7:34 மணி - 14.9.2021 காலை 9:55 மணி


ரிஷபம்



latest tamil news



புதன், சுக்கிரனால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு வளம் சேர்க்கும்.

கார்த்திகை 2,3,4: தொழிலில்/ பணியில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீதிருந்த மரியாதை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த மந்த நிலை மாறும்.

ரோகிணி: மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். உறவினர்களின் வருகையால் குடும்ப பிரச்னைகள் தீரும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

மிருகசீரிடம் 1,2: முன் கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வளர்ப்புப் பிராணிகளிடம் சற்று கவனமாக இருங்கள்.

சந்திராஷ்டமம்: 14.9.2021 காலை 9:56 மணி - 16.9.2021 மதியம் 12:46 மணி


மிதுனம்


புதன், சுக்கிரன், சந்திரன் நன்மைகளை வழங்குவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் தரும்.

மிருகசீரிடம், 3,4: வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்பட அனுமதிக்காதீர்கள். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் சேர்வர். குடும்பத்தில் சச்சரவு தீர்ந்து அமைதி நிலவும்.

திருவாதிரை: ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வீர்கள். எதிர்காலம் பற்றிக் குடும்பத்தாருடன் ஆலோசிப்பீர்கள். உடன் பிறந்தவர்களுக்காக விட்டுக்கொடுப்பது நல்லது.

புனர்பூசம், 1,2,3: பணியில் திட்டவட்டமான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பதவியில் இருப்பவர்களின் நட்பு அளவோடு இருந்தால் நல்லது.

சந்திராஷ்டமம்: 16.9.2021 மதியம் 12:47 மணி - நாள் முழுவதும்


கடகம்


செவ்வாய், குரு, சுக்கிரன் நற்பலன் வழங்குவர். அனுமன் வழிபாடு அல்லல் போக்கும்.

புனர்பூசம்,4: விருந்தினர்களின் வருகையால் வீட்டில் விவாதம் ஏற்படலாம் கவனம். வியாபாரத்தில் கூடுதல் கமிஷனால் ஆதாயம் அடைவீர்கள். திட்டங்களைச் செயல்படுவதில் புத்திசாலித்தனம் பளிச்சிடும்.

பூசம்: அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பெருமை உயரும். திட்டமிட்ட விஷயங்களை நல்லபடியாக செய்ய முடியும். கடந்த வார டென்ஷன் இனி இருக்காது.

ஆயில்யம்: தொடர் அலைச்சலால் உடலில் அசதியும், சோர்வும் ஏற்படும். வெற்றி காரணமாக மனதில் உற்சாகம் வரும். நண்பரால் தொந்தரவு ஏற்பட்டு நீங்கும். கடன் அடைபட வாய்ப்புண்டு.


சிம்மம்



latest tamil news



புதன், சந்திரன், சனி சாதக நிலையில் உள்ளன. விநாயகர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: எதிர்பாராத நபர் மூலம் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வரும். இரண்டு, மூன்று விஷயங்களை ஒரே நேரத்தில் முடித்து பெருமிதம் கொள்வீர்கள்.

பூரம்: மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகளின் திருமண விஷயத்தில் தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலதிகாரியின் ஆதரவைப் பெற தாமதம் உண்டாகும்.

உத்திரம்,1: எதிர்ப்புகளைப் பேசியே சமாளிப்பீர்கள். பிரார்த்தனைகள் தாமதமின்றி நிறைவேறும். அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.


கன்னி



குரு, சுக்கிரன், கேது நன்மை தருவர். மகாவிஷ்ணு வழிபாடு வளம் தரும்.

உத்திரம் 2,3,4: அன்பால் அனைவரின் ஆசியைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் திட்டம் கை கூடும். பிறரிடம் உதவி பெறாமல் முனைப்புடன் செயல்படுங்கள்.

அஸ்தம்: வீடு வாங்குவது அல்லது கட்டுவது தொடர்பாக முயற்சிகள் எடுக்கலாம். கணவன், மனைவிக்கிடையே சிறிய கருத்து மோதல்கள் உண்டாக வாய்ப்புண்டு. உடன் பிறந்தவர்களிடம் சண்டைகள் வேண்டாம்.

சித்திரை 1,2: வீண்செலவு ஏற்பட வாய்ப்புண்டு. நெருங்கிய நண்பர் ஒருவர் விரோதமாக இருப்பது போல் கற்பனை ஏற்படும். பெற்றோர் பேச்சை மதித்து நடந்து அவர்களுக்கு மகிழ்ச்சி அளியுங்கள். வீண் விவாதம் வேண்டாம்.


துலாம்


சுக்கிரன், குரு, புதன், சந்திரன் நன்மை தரும் நிலையில் உள்ளனர். அம்பிகை வழிபாடு வெற்றி அளிக்கும்.

சித்திரை 3,4: கனவு, திட்டங்கள் செயல்வடிவம் பெறும். தவறு செய்தாலும் கூட பெரியளவில் சிக்கல் இருக்காது. குடும்பத்தினருடன் விட்டுக்கொடுப்பது அவசியம்.

சுவாதி: சூழ்நிலைக்கு ஏற்ப நடக்கவும். உறவினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பைத் தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தில் அனாவசிய செலவை தவிர்க்க நடவடிக்கை எடுப்பீர்கள்

விசாகம் 1,2,3: சொந்த வேலை காரணமாக சிறு பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைக்கு மாறுவது பற்றி யோசியுங்கள்.


விருச்சிகம்


சனி, செவ்வாய், புதன், அதிர்ஷ்டம் அளிப்பர். குரு வழிபாடு துன்பம் நீக்கும்

விசாகம்,4: சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக உதவுவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். சிலருக்கு தொழில் ரீதியான தடை நீங்கும். சொந்த வீட்டுக்குப் போகும் யோகம் உண்டாகும்.

அனுஷம்: மகிழ்ச்சியான வாரம் இது. மகிழ்ச்சி தரும் செய்தி வரும். கோபத்தில் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பெண்களுக்குப் மனதில் திருப்தி இருக்கும். வீண் செலவுகள் ஏற்படாது.

கேட்டை: கடந்த கால உழைப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைக்கும். லாபம் உயரும். அனுபவ அறிவால் நற்பெயர் எடுப்பீர்கள். செல்வாக்கு உயரும். பாராட்டுக் கிடைக்கும். கடந்த வார டென்ஷன் நீங்கும்.


தனுசு


சந்திரன், சுக்கிரன், புதன், கேது நன்மையளிப்பர். பைரவர் வழிபாடு நிம்மதி தரும்.

மூலம்: பெருமிதம் வரும். புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளை ஏற்பட்டு பின் சீராகும். திருமண விஷயத்தில் பொறுமை கடைப்பிடிப்பது அவசியம்.

பூராடம்: மக்கள் பாராட்டும் செயல் செய்வீர்கள். உயரதிகாரிகளின் பிரியத்திற்கு ஆளாவீர்கள். தொழில் செய்பவர்கள், பாக்கித் தொகை வசூலிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பங்குச்சந்தை லாபம் சுமாராக வரும்

உத்திராடம்,1: உங்கள் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய வாரம். இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் சிறு தொல்லையைச் சமாளித்துவிடுவீர்கள். பெண்கள், எதிர்பார்த்ததைவிட அதிகம் சேமிப்பீர்கள்.


மகரம்


கேது, சுக்கிரன், புதன், குருவால் நன்கை ம அதிர்ஷ்டம் வழங்கும் அமர்வில் உள்ளனர். பெருமாள் வழிபாடு வளம் தரும்.

உத்திராடம்,2,3,4: பொறுப்புகளில் கவனமாக இருந்து வெல்வீர்கள். உறவினர்களிடமிருந்து உதவி கிடைக்கும். பணியில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

திருவோணம்: ஆதாயம் உண்டு. சிலர் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே ஒற்றுமை நிலவும்.

அவிட்டம்,1,2: எதிர்பாலினரிடம் கவனமாகப்பழகுங்கள். இத்தனை நாள் நிலவிய சிறு பயம் நீங்கும். வரவை விட செலவு சற்று அதிகமாக இருக்கும். மனதுக்கு நெருக்கமானவர்களுடன் சுமுக உறவு ஏற்படும்.


கும்பம்


சுக்கிரன், புதன், சந்திரனால் நன்மை நடந்தேறும். குருவாயூரப்பனை வழிபடுங்கள்.

அவிட்டம் 3,4: வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ஏற்ற இறக்கங்களுடன் செல்லும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனையும், ஆதரவும் கிடைக்கும். முன்பின் தெரியாதவர்களின் கவனமாக பழகவும்.

சதயம்: வாழ்வு ஏற்ற இறக்கத்துடன் செல்லும். பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நட்பு வேண்டாம். தேவையி்ன்றி மற்றவர் விஷயங்களில் தலையிடாதீர்.

பூரட்டாதி1,2,3: சகோதரர்கள் தங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.. எதிர்பாலினத்தினரிடமிருந்து நல்ல தகவல் வரும். வாகன பயணத்தில் கவனமாக இருப்பது அவசியம்.


மீனம்


புதன், சுக்கிரன், குரு, சனிவால் நன்மை சேரும். சிவன் வழிபாடு துயர் தீர்க்கும்.

பூரட்டாதி 4: கணவன், மனைவி இடையே மன சஞ்சலம் தீரும். பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்ப பிரச்னையை பிறரிடம் பகிர வேண்டாம்.

உத்திரட்டாதி: நெருங்கிய நபரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பல காலம் இருந்த கடன் பிரச்னை தீர வழி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரரை அனுசரித்து செல்வர்.

ரேவதி: மனைவியின்/ கணவரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கையை கொடுக்கும். பணம் புரட்டுவதில் சிரமங்கள் இருக்கும். சொந்த பந்தம் மதிக்கும்படி கவனமாக நடந்துகொள்ளுங்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X