பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் வீடுகளில் வழிபாடு நடத்தினர். கோயில்களில் பக்தர்கள் இன்றி பூஜை நடந்தது.பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியில்லாமல் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா
VinayakaChavithi, விநாயகர்சதுர்த்தி, தமிழகம்,

சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் வீடுகளில் வழிபாடு நடத்தினர். கோயில்களில் பக்தர்கள் இன்றி பூஜை நடந்தது.


பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியில்லாமல் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். கொரோனா அரசு விதிகளின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலினுள் விழா உற்ஸவங்கள் நடந்து வருகிறது.
இன்று விழா நிறைவை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்பின்றி தீர்த்தவாரி காலை 9:00 மணிக்கு துவங்கியது. உற்ஸவம், சண்டிகேஸ்வரர் வடக்குவாசல் எழுந்தருளலும், அங்குசத்தேவர் படித்துறையில் எழுந்தருளி அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்று தீர்த்தவாரியும் நடைபெறும். பின்னர் கோயிலினுள் உற்ஸவர் எழுந்தருளுவார்.
பின்னர் மதியம் 1:00 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் உற்ஸவர்கள் சண்டிகேஸ்வரர், கற்பகவிநாயகர், சோமஸ்கந்தர்,தனி அம்மன்,வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோர் எழுந்தருளலும் நடைபெறும். வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.


latest tamil news

மெகா கொழுக்கட்டை படையல்
latest tamil newsஅதே சமயம் , தலா 30 கிலோவில் மெகா சைஸ் கொழுக்கட்டை தயாரித்து, ஒரு கொழுக்கட்டை வெள்ளை துணியில், துாளி கட்டி, மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையார் இதற்கு எடுத்துச் செல்லப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. ஒரு கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர் ஆனால், மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையாரை தரிசிப்பதற்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


சிறப்பு வழிபாடு


உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நோய் பரவல் காரணமாக கோவில்களில் தரிசனம் தடை விதிக்கப்பட்டதையடுத்து பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
கோவை, புலியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. நோய் பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் தடை விதிக்கப்பட்டதையடுத்துவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் வெளியே நின்று பொதுமக்கள் விநாயகரை வணங்கி சென்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
11-செப்-202103:57:34 IST Report Abuse
Milirvan எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் என்பார்கள்.. பொய்ப்பிரச்சாரம், வன்முறை, சூழ்ச்சி, போன்றவற்றை சனாதனத்தின் எதிரிகள் பயன்படுத்துவது அப்பாவி சனாதனிகளுக்கு தெரிய வராமல் இருக்கிறது.. மற்றவர்களின் வழிபாட்டு இடங்களில் துர்போதனைகளும், வெறுப்புணர்ச்சியும் பரப்பப்படுவதை ஏன் அரசியல் கட்சிகள் மறைமுக ஆதரவாக, கண்டும் காணாமல் இருக்கின்றன? வெறுப்புணர்ச்சி எனகிற மிக பலமான ஆயுதத்தை பல ஆட்சியாளர்கள் உலகெங்கும் வெற்றிகரமாக பயன்படுத்தி இருக்கின்றனர்.. ஹிந்துக்களுக்கெதிராக முகல்கள், யூதர்களுக்கெதிராக ஹிட்லர், தமிழர்களுக்கெதிராக ராஜபக்க்ஷேக்கள் என்று குறிப்பு காட்டலாம். ஹிந்துக்களை அறியாமையிலும், பொய் பிரச்சாரத்திலும் ஆழ்த்தியிருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை அவர்களைப்போன்றே பிரச்சாரத்தை மேற்கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.. அறிதலே ஆயுதம்..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
10-செப்-202121:33:37 IST Report Abuse
J.Isaac Purushottaman Cuddalure மலேசியா // முகவரிலேயே உண்மை இல்லையே. இது தான் ஆன்மீகமா
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
10-செப்-202120:24:35 IST Report Abuse
M  Ramachandran என்ன எழுதினாலும் ஏதோ ஒன்றின் மேல் மழை பெய்வது போன்று தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X