சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் தங்க நகைகளை பறிக்க முயன்றவர்களின் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதி-1-ல் வசிப்பவர் சம்பத்(51). மின்சார வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 9 மணியளவில் வழக்கம்போல் பணிக்கு சென்றார். வீட்டில்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் தங்க நகைகளை பறிக்க முயன்றவர்களின் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதி-1-ல் வசிப்பவர் சம்பத்(51). மின்சார வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 9 மணியளவில் வழக்கம்போல் பணிக்கு சென்றார். வீட்டில் அவரது மனைவி நந்தினி (47), மகள் ஷாலினி(19) ஆகியோர் மட்டும் இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் சம்பத் வீட்டுக்கு வந்தனர். திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருவதாகவும், மின்செயற் பொறியாளர் வீட்டில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என நந்தினியிடம் அவர்கள் கூறினர்.

இதை நம்பிய நந்தினி அந்த 3 இளைஞர்களை வீட்டுக்குள் அனுமதித்தார். வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர்கள் முன்பக்க கதவை வேகமாக தாழிட்டு, கத்தியை காட்டி நந்தினி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி கொடுக்கும்படி மிரட்டினர். இதைகண்ட நந்தினி கூச்சலிட்டார். அப்போது, வீட்டுக்குள் இருந்து மகள் ஷாலினி ஓடி வந்தார். அவரையும் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.
இருப்பினும், நந்தினி கூச்சலிடவே, அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். இதைகண்ட மர்ம நபர்களில் ஒருவர் நந்தினியை தாக்கினார். அதில் அவர் நிலை குலைந்து கீழே சாய்ந்தார். உடனே, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். பொதுமக்கள் மடக்கிப்பிடித்ததில் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பியோடினர்.
இதைதொடர்ந்து, பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கத்தொடங்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் போலீசார்அங்கு விரைந்து வந்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (27) என்பதும், அவருடன் வந்தவர்கள் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. திருப்பத்தூரை சேர்ந்த மணி, பகவதி ஆகியோரையும் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த கிராமிய காவல் துறையினர் சிலம்பரசனை கைது செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் தங்க நகைகளை பறிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X