மம்தாவை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டி

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில் பவானிப்பூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் போட்டியிடுவதற்காக பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா
B.J.P, BJP, Bharatiya Janata Party,Mamata Banerjee, பா.ஜ,மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: மே.வங்கத்தில் பவானிப்பூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் போட்டியிடுவதற்காக பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதி உள்ளிட்ட 3 தொகுதிகளில் வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பவானிப்பூரில் போட்டியிடுவதற்காக மம்தா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


latest tamil news



இந்நிலையில், பவானிப்பூரில் மம்தாவை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சாம்செர்கன்ஜில் மிலன் கோஷூம், ஜாங்கிபூரில் சுஜித் தாசும் பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ளனர்.

இதனிடையே பவானிப்பூர் தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக மாநில துணைத்தலைவர் திலீப் கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக எம்.பி.,க்கள் சவுமித்ரா கான் மற்றும் ஜோதிர்மயி சஙங் மகோதா ஆகியோரும், 8 வார்டுகளின் பொறுப்பு 8 எம்.எல்.ஏ.,க்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
11-செப்-202105:37:31 IST Report Abuse
மதுரை விருமாண்டி மேற்கு வங்க பாஜாக்கா அலுவலகத்தில் தலைவர்அறைக்கு இன்னுக் கண்ணாடி கதவு போடல்லியாமே. அண்ணாமலேஜீ, போயி திருத்துங்கோ
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
11-செப்-202105:34:43 IST Report Abuse
மதுரை விருமாண்டி பிரியங்கா திப்ரிவஅலை போடணும்ன்னு -ஐ மீன் பாஜாக்கா வேட்பாளரா போடணும்ன்னு - பாஜாக்காலே பெரிய போட்டியாம் 🤔
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
11-செப்-202103:05:09 IST Report Abuse
Aarkay All the very best சொர்ணாக்காவை தோற்கடிக்க வாழ்த்துக்கள். சொர்ணாக்கா நிறைய தில்லாலங்கடி வேலைகள் செய்வார். உஷார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X