அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் அரசு கல்லூரி அமைக்க வாய்ப்பில்லை: அமைச்சர்

Added : செப் 10, 2021
Share
Advertisement
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா: திருப்பரங்குன்றத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க அரசு முன்வருமா?அமைச்சர் பொன்முடி: திருப்பரங்குன்றம் தொகுதி அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில், மூன்று அரசு கலைக் கல்லுாரி, 17 அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகள், 21 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 12 பொறியியல்

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்

அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா: திருப்பரங்குன்றத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பொன்முடி: திருப்பரங்குன்றம் தொகுதி அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில், மூன்று அரசு கலைக் கல்லுாரி, 17 அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகள், 21 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 12 பொறியியல் கல்லுாரிகள், 17 பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவை மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்வதால், புதிய கல்லுாரி துவக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

ராஜன் செல்லப்பா: திருப்பரங்குன்றத்தில் தேவையான இடவசதி உள்ளது. அப்பகுதியில் தனியார் கல்லுாரிகள் மட்டுமே உள்ளன. அரசு கல்லுாரிகள் இல்லை. ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கல்லுாரி துவக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். ஆனால், ஆன்மிக பகுதியான திருப்பரங்குன்றத்தை மறந்து விட்டார்.

அமைச்சர் பொன்முடி: எம்.எல்.ஏ.,க்கள் அனைவருமே தங்கள் தொகுதிக்கு கல்லுாரி கேட்கின்றனர். இந்த ஆண்டு 21 கலைக் கல்லுாரிகளை துவக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதற்கு நன்றி கூறுங்கள். மதுரை மாவட்டத்தில் தற்போதுள்ள கல்லுாரிகளில், 10 ஆயிரத்து 439 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். வரும் கல்வியாண்டில் புதிய கல்லுாரி அமைக்க அரசு யோசிக்கும்.

ராஜன் செல்லப்பா: அரசு கல்லுாரிகளில் கூடுதலாக 25 சதவீதம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகளில் கூடுதலாக 25 சதவீதம் மாணவர்களை சேர்க்க அரசாணை வெளியிட வேண்டும். தனியார் கல்லுாரிகளில், முதலில் சுயநிதி வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். அதன் பின்பே மற்ற வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். மாணவர்கள் ஆர்வமுடன் சேர விரும்பும் துறைகளில் இடங்கள் இல்லை. எனவே, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி: தற்போது அரசு கல்லுாரிகளில் 25 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.கடந்த காலங்களில், தனியார் கல்லுாரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதை 15 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் சேகர்பாபு: முதல்வரின் திட்டம் ௧௦ ஆண்டு திட்டம், நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில், முதன் முதலாக 10 கல்லுாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மதுரை மாவட்டத்தில், 35 கோடி ரூபாயில் யாத்ரிகா நிவாஸ்; 10 கோடி ரூபாயில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. உங்கள் எண்ணத்தை முதல்வர் நிறைவேற்றித் தருவார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X