யாதுமாகி நிற்கின்றாய் பாரதி

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாரதியின் நினைவு தினம் இனி மகாகவி தினமாக அனுசரிக்கப்படும்பாரதி ஆர்வலர்களுக்கு மூன்று லட்சம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்பாரதி பற்றிய கவிதை போட்டியில் வெல்லும் மாணவ,மாணவியருக்கு வருடந்தோறும் ஒரு லட்சம்பாரதியின் உருவச் சிலையும் அவர் உருவம் பதித்த பொருட்களும் மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கும்பாரதி வாழ்ந்த காசி வீடு புதுப்பிக்கபடும் என்றுlatest tamil news


பாரதியின் நினைவு தினம் இனி மகாகவி தினமாக அனுசரிக்கப்படும்
பாரதி ஆர்வலர்களுக்கு மூன்று லட்சம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்
பாரதி பற்றிய கவிதை போட்டியில் வெல்லும் மாணவ,மாணவியருக்கு வருடந்தோறும் ஒரு லட்சம்
பாரதியின் உருவச் சிலையும் அவர் உருவம் பதித்த பொருட்களும் மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கும்
பாரதி வாழ்ந்த காசி வீடு புதுப்பிக்கபடும் என்று அடுக்கடுக்கான அரசு அறிவிப்பால் பாரதி ஆர்வலர்கள் மிகவும் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளனர்.


latest tamil news


அத்தனை புகழுக்கும் பாரதி பொருத்தமானவனே,
நவீன தமிழ்க் கவிதைகளின் தந்தை,தமிழ்,தமிழர் நலன்,பெண் விடுதலை,தீண்டாமை போன்றவற்றிற்கு எதிராக நுாறு ஆண்டுகளுக்கு முன்னரே உரக்க குரல் கொடுத்த முன்னோடி,தனது கவிதையால் தேசபக்தி கனலை நாடு முழுவதும் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி,முன்னுாறு ஆண்டுகள் வாழும் அனுபவத்தை 39 ஆண்டுக்குள் வாழ்ந்து முடித்த மகா யோகி சுப்பிரமணிய பாரதியின் நுாற்றாண்டு நினைவு தினம் செப்டம்பர் 12 ந்தேதி வருகிறது.
1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ந்தேதி எட்டயபுரத்தில் பிறந்தார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை ஆனால் 1921 ம் வருடம் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி இரவு மிகவும் முடியாத நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர் நள்ளிரவு 1:30 மணிக்கு இறந்து போனதாக தகவல் சொல்லப்படுகிறது.இதனால் அவரது நினைவு தினத்தை 11 ம்தேதி என்றும் இல்லையில்லை 12 ம்தேதிதான் சரி என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்த போதிலும் அரசு அதிகாரபூர்வமாக 12 ந்தேதியை அறிவித்துள்ளது.அதையே நாமும் ஏற்போம்.
இறந்த தேதியில் மட்டுமல்ல அவரது இறப்பைக்கூட திருவல்லிக்கேணி யானையோடு முடிச்சுப்போட்டுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையல்ல. திருவல்லிக்கேணி கோயில் யானை சாது என்பதுடன் பாரதியிடம் பிரியமாகவும் இருந்தது.அன்றைய தினம் ஒரு அசந்தர்ப்பத்தில் பாரதியை அந்த யானை ஒதுக்கித்தள்ளியதே தவிர துாக்கிப் போடவில்லை.அந்த சம்பவம் காரணமாக சில நாட்கள்தான் சோர்ந்திருந்தார் பிறகு உடல் நலம் தேறி மீண்டும் பணிக்கு சென்றுவிட்டார் அது மட்டுமல்ல அதன்பிறகு 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவிற்கும் சென்று பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா? “மனிதனுக்கு மரணமில்லை” என்பதாகும்.
மரணமில்லை என்று பேசிவிட்டு வந்த பிறகு ஒரு மாதத்தில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனதுதான் கொடுமை.
உண்மையைச் சொல்லப்போனால் அந்த முண்டாசுக் கவிஞர் எங்கே இறந்து போனார் தமிழர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் வாழ்ந்து கொண்டல்லவா இருக்கிறார். அவரின் வரிகளை எப்போது படித்தாலும் இப்போது பிறந்த அக்கினிக் குஞ்சாய் கதகதப்புடன் அல்லவா இருக்கிறது.
பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் பார் போற்றும் சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் இருந்தவர்.
அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவர் எழுத்தில் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததுமில்லை.
ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அந்த ஞானத்தை எல்லாம் பிழிந்தெடுத்து அதை கவிதையாக கொடுத்து தமிழை வளப்படுத்தினார்.
இன்றைக்கும் நாம் காணும் இடமெங்கும் காட்சிதருகின்றார்! கண்களை மூடினால் கனவாகின்றார் ! காற்றாய் வந்து சுவாசமாகின்றார் !உணர்ச்சி கொண்டு பேசும் போது வார்த்தையாகிறார்.
ஒரு முறை அவரே தன் சீடரான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் , “குவளை நான் நூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் இப்போது புரிந்து கொள்ளாது என்றார், அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு. இப்போது பாரதியைப் பேசாத, புகழாத, அவர் பாடல்களைப் பாடாத வாய்களே இப்போது இல்லை எனலாம்.
உண்மையைச் சொல்லப்போனால் காலமெல்லாம் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு போலீசுக்கு இடையே ஒடிக்கொண்டே இருந்தவர், வறுமை காரணமாக வாழ்க்கையை நகர்த்தமுடியாமல் அடிக்கடி அவர் வணங்கும் பராசக்தியிடம் சண்டை போட்டவர், தன்மானமே பெரிது என மன்னர்களின் சன்மானத்தை துச்சமாக மதித்தவர், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்குண்ட மனிதனால் இப்படி இப்படியெல்லாம் சாகாவரம் பெற்ற கவிதைகளை படைக்க முடிந்தது என்பது வியப்பான செய்தியே
பாரதி சந்தேகமே இல்லாமல் ஒரு யுகபுருஷன் முன்பைவிட இப்போதுதான் அவர் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார் ஆகவேதான் அரசு இன்று அடுத்தடுத்து நிறைய அறிவிப்புகளை செய்துள்ளது.
அறிவிப்புகளில் பல இளைய தலைமுறைக்கு பாரதியை எடுத்துச் செல்லும் பாங்கிலே இருப்பது பாராட்டுக்குரியது அது செயல்படும்போது பாரதி மகாகவிதான் என்பதை உலகமே உணரும்.-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
11-செப்-202108:36:06 IST Report Abuse
K.Muthuraj பாரதியார் மாபெரும் சமூக நீதி புரட்சியாளர். அவருக்கு முன் பெரியார் மற்றும் அவர் வழி மொழிவோர் எல்லாம் ஒன்றுமற்றவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X