சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைகீழாக கார் கவிழ்ந்து தனியார் நிறுவன மேலாளர் படுகாயம்

Added : செப் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆற்காடு:ஆற்காடு அருகே, மாடு மிரட்டு ஓடியதால் தலைகீழாக கார் கவிழ்ந்து தனியார் நிறுவன மேலாளர் படுகாயமடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பசும்பொன் நகரை சேர்ந்தவவர் கார்த்திகேயன், 36. இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை 4:00 மணிக்கு செய்யாறில் இருந்து பெங்களூருக்கு டாடா நெக்ஸான் காரில்
 தலைகீழாக கார் கவிழ்ந்து தனியார் நிறுவன மேலாளர் படுகாயம்

ஆற்காடு:ஆற்காடு அருகே, மாடு மிரட்டு ஓடியதால் தலைகீழாக கார் கவிழ்ந்து தனியார் நிறுவன மேலாளர் படுகாயமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பசும்பொன் நகரை சேர்ந்தவவர் கார்த்திகேயன், 36. இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை 4:00 மணிக்கு செய்யாறில் இருந்து பெங்களூருக்கு டாடா நெக்ஸான் காரில் சென்றார்.காரை இவரே ஓட்டிச் சென்றார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பை பாஸ் சாலையில் இவர் சென்ற போது, எருமை மாடு ஒன்று திடிரென மிரண்டு ஓடியது. இதனால் நிலைதடுமாறிய பிரேக் போட்டதில், மாடு மீது கார் மோதி தலைகீழோக கவிழ்ந்தது.

திடிரென கார் கவிழ்ந்ததால், அதற்கு பின்னால் பைக்கில் வந்தவர்கள் சடன் பிரேக் போட்டதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்தனர். பொது மக்கள் கார்த்திகேயனை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் இருந்து கீழே விழுந்தவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது.ஆற்காடு போலீசார் கிரென் மூலம் காரை அப்புறப்படுத்தினர். ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்தில் எருமை மாடு காயமில்லாமல் உயிர் தப்பியது.

ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்கள் வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றிக் கொண்டுள்ளது. இதனால் இது போன்ற விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHARUMATHI - KERALA,இந்தியா
11-செப்-202113:59:08 IST Report Abuse
CHARUMATHI not only cows buffaloes stray dogs are creating hell for drivers of four and two wheelers especially. no corporation take care of this. in kerala they immly come take away those stray dogs and animals. governemtn sd take immediate action on this. this sd be brought to the notice of cm infact. girls who use two wheelers are facing pathetic things due to these stray animals in road. but we sd mention here there is no civic sense to many of the people . they criticize village people who mind cow and goat movement but they are more with civic sense and responsibility.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-செப்-202110:31:26 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நான் பல மாதங்களுக்கு முன் இத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்ததினை மீண்டும் பதிவிடுகிறேன். "மாட்டு பண்ணை, டிராவல்ஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் நடத்துவது மிக எளிது. ஏனெனில் இதற்கென்று கொட்டகையோ, கார் shed ஓ தேவையில்லை. ரோட்டில் விட்டு விடலாம். அரசு நன்றாக கவனித்து கொள்ளும். அதே போல் பள்ளி, கல்லூரி வாகனங்கள். GST ரோட்டில் ஆறு வழி சாலையை இரு வழி சாலையாக மாற்றிய பெருமை சேரும் (பல்லாவரம் டு பெருங்களத்தூர்). குறிப்பாக தாம்பரம் சானடோரியும் ரோடு மிக குறுகலாகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X