ஹாரங்கி அணை பாதுகாப்பில் தொழில் பாதுகாப்பு படை

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குடகு:குஷால் நகர் அருகிலுள்ள ஹாரங்கி அணை, கர்நாடக தொழில் பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் இருக்கும். எனவே அணையின் சுற்றுப்பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் விழும்.குடகின் குஷால் நகர் அருகில் பிரசித்தி பெற்ற ஹாரங்கி அணை உள்ளது. இது, காவிரி நீர்ப்பாசன அணைகளில் ஒன்றாகும். இதற்கு முன் சிவில் போலீசார், அணையின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.
 ஹாரங்கி அணை பாதுகாப்பில் தொழில் பாதுகாப்பு படை

குடகு:குஷால் நகர் அருகிலுள்ள ஹாரங்கி அணை, கர்நாடக தொழில் பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் இருக்கும். எனவே அணையின் சுற்றுப்பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் விழும்.

குடகின் குஷால் நகர் அருகில் பிரசித்தி பெற்ற ஹாரங்கி அணை உள்ளது. இது, காவிரி நீர்ப்பாசன அணைகளில் ஒன்றாகும். இதற்கு முன் சிவில் போலீசார், அணையின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். போலீசாரின் கண்களை மறைத்து, பல சட்ட விரோத சம்பவங்கள் நடக்கின்றன. விஷமிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது.இதை மனதில் கொண்டு, மாநில அரசின் தொழில் பாதுகாப்பு படையை, மாநில அரசு நியமித்துள்ளது.

அணையின் நுழை வாசல், மேற்பகுதி, அணையின் மதகு, பவர் ஹவுஸ் என, அனைத்து இடங்களிலும், தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்சியுடன், இவர்களுக்கு துப்பாக்கியும் தரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ஹாரங்கி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும், கால்வாய் இறுதி வரை வாகனத்தில், ரோந்து சுற்றுகின்றனர்.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஹாரங்கி அணையின் பாதுகாப்புக்காகவும், சுற்றுப்பகுதிகளில் நடக்கும் சட்டவிரோதங்களை கட்டுப்படுத்தவும், போலீஸ் பாதுகாப்புடன், கர்நாடக தொழில் பாதுகாப்பு படையினரும், நியமிக்கப்பட்டுள்ளனர்.அணையை பார்க்க வரும் சுற்றுலா பயணியரின் வாகனங்களை நிறுத்த, அணையின் நுழைவாயில் அருகில், 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் நுழைய, போலீஸ் படையின் தலைமை அதிகாரியிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.

இதற்கு முன் நுழைவாயிலிலிருந்து அணை அருகில் செல்ல, நீர்ப்பாசனத் துறையிடம் அனுமதி பெற்றால் போதுமானதாக இருந்தது. இனி போலீஸ் படையிடம் அனுமதி பெற வேண்டும்.இரவு நேரத்தில், ஹாரங்கி பூங்கா, இசை அருவியை காண வரும் சுற்றுலா பயணியருக்கு, பாதுகாப்பு படையினர், முழுமையான பாதுகாப்பை அளிப்பர். ஒவ்வொருவரையும் சோதனையிட்ட பிறகே அணையின் உட்பகுதிக்கு அனுமதிக்கப்படுவர். வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியரின் தகவல்கள், வாகனத்தை பரிசீலித்து, வாகன எண்களை பதிவு செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
11-செப்-202110:41:39 IST Report Abuse
JeevaKiran சிவில் போலீசார், அணையின் பாதுகாப்புக்கு நியமிக்கப் பட்டிருந்தனர். போலீசாரின் கண்களை மறைத்து, பல சட்ட விரோத சம்பவங்கள் நடக்கின்றன. விஷமிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது.இதை மனதில் கொண்டு, மாநில அரசின் தொழில் பாதுகாப்பு படையை, மாநில அரசு நியமித்துள்ளது. இப்போ புரிகிறதா? நாட்டில் குற்ற சம்பவங்கள் நடக்க மூல காரணம் யார் என்று?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X