விநாயகர் சதுர்த்தி நாளில் மின்சாரம் பாய்ந்து யானை பலி

Added : செப் 10, 2021
Share
Advertisement
ராம்நகர்:விநாயகர் சதுர்த்தியன்று மின்சாரம் பாய்ந்து யானை பலியானது.ராம்நகர், சென்னப்பட்டணாவின், தெங்கினகல்லு வனப்பகுதியை ஒட்டியபடி, மல்லங்கரே கிராமத்தின், என்.ஆர்.காலனி அருகில் தோட்டத்தில் விளைச்சல்களை பாதுகாப்புக்காக, மின்சார வேலி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, வனப்பகுதியிலிருந்து, காட்டு யானைகள் கூட்டம் தோட்டத்தில் நுழைந்தன.அதில் 35 - 40 வயதுக்கு உட்பட்ட

ராம்நகர்:விநாயகர் சதுர்த்தியன்று மின்சாரம் பாய்ந்து யானை பலியானது.

ராம்நகர், சென்னப்பட்டணாவின், தெங்கினகல்லு வனப்பகுதியை ஒட்டியபடி, மல்லங்கரே கிராமத்தின், என்.ஆர்.காலனி அருகில் தோட்டத்தில் விளைச்சல்களை பாதுகாப்புக்காக, மின்சார வேலி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, வனப்பகுதியிலிருந்து, காட்டு யானைகள் கூட்டம் தோட்டத்தில் நுழைந்தன.அதில் 35 - 40 வயதுக்கு உட்பட்ட ஆண் யானை, மின்வேலியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து துடித்து இறந்தது.

இதை கண்டு பயந்த மற்ற யானைகள், அங்கிருந்து ஓடிவிட்டன.தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர், இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியன்றே, யானை மின்சாரம் தாக்கி இறந்ததால், கிராமத்தினர் வருத்தமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X