மந்திரிகளுக்கு அட்வைஸ்!| Dinamalar

மந்திரிகளுக்கு 'அட்வைஸ்!'

Added : செப் 10, 2021
Share
மந்திரிகளுக்கு 'அட்வைஸ்!'ஆப்சென்ட் ஆக கூடாதுன்னு மாணவர்களுக்கு ஸ்கூல் டீச்சர் புத்தி சொல்வது போல, சபாநாயகரும், மேலவை தலைவரும், அசம்பிளி கூட்டத்தில் தவறாமல் ஆஜராகணும்னு மந்திரிகளுக்கு உத்தரவு கடிதம் கொடுத்திருக்காங்க.மந்திரிங்க பொறுப்பில்லாமல் ஆப்சென்ட் ஆவதையே வழக்கமா ஆக்கியிருக்காங்க. கூட்டம் எதுக்கு நடத்துறாங்க; பல லட்சம் எதுக்கு செலவு செய்றாங்கன்னு

மந்திரிகளுக்கு 'அட்வைஸ்!'

ஆப்சென்ட் ஆக கூடாதுன்னு மாணவர்களுக்கு ஸ்கூல் டீச்சர் புத்தி சொல்வது போல, சபாநாயகரும், மேலவை தலைவரும், அசம்பிளி கூட்டத்தில் தவறாமல் ஆஜராகணும்னு மந்திரிகளுக்கு உத்தரவு கடிதம் கொடுத்திருக்காங்க.மந்திரிங்க பொறுப்பில்லாமல் ஆப்சென்ட் ஆவதையே வழக்கமா ஆக்கியிருக்காங்க. கூட்டம் எதுக்கு நடத்துறாங்க; பல லட்சம் எதுக்கு செலவு செய்றாங்கன்னு புரிஞ்சிக்காமல் நேரத்தையும், வரி பணத்தையும், பொறுப்பையும், தகுதியையும் வேஸ்ட் பண்றாங்களாம்.
மந்திரி பதவி வேணும்னு தவம் இருந்து வாங்கியவங்க பொறுப்பு இல்லாமல் அலட்சியம் காட்ட கூடாதுங்கிறதாலே, முன்னெச்சரிக்கை அட்வைஸ் நோட்டீஸ் போயிருக்கு.இதுக்கு அப்புறமும் ஆப்சென்ட் ஆவார்களா பொறுத்திருந்து பார்க்கலாமே!

மேலிடத்து சட்டாம்பிள்ளை!

கடந்த ஒரு வருஷமாவே கர்நாடக காற்று, டெல்லியில் வீசியபடியே இருக்குது. அதிலும் சி.எம்., பயணம் சகவாசமா, சுகவாசமான்னு பூ வட்டாரத்தில் யோசிக்க வெச்சிருக்கு.அதிர்ஷ்டவமா சி.எம்., ஆனவரு, மேலிடத்துக்கு விசுவாசத்தை காட்ட இவரோட பயணங்கள் ஓயல. முதல்வர் பற்றி இல்லாத பொல்லாததை மேலிடத்தில் யாரும் போட்டுக் கொடுக்காத படி அணை போடவே, என்ன செய்யணும்னு மேலிடம் உத்தரவு தருதோ, அதை கேட்டு வாங்கி, பதவிக் காலத்தை முழுசா முடிக்க போறாராம். இவரு மேலிடத்து சட்டாம்பிள்ளையாம்.
இந்த மேலிட டீல் இவருக்கு சவுகர்யமா இருக்குதாம்.ஸ்டேட் டெவலப்மென்ட்டு ஆகுதோ இல்லையோ, அவரோட கட்சி செல்வாக்கா இருக்க, மேலிட சொல்வாக்குப்படி நடந்தே ஆகணும்னு மாநில சுயேட்சையை தொலைத்தாலும் கவலை இல்லன்னு புதுமாதிரி அரசியலை துவக்கிட்டாரு.ஒவ்வொரு முறையும் டெல்லி செல்வது, முதல்வருக்கு வெற்றிப் பயணமாம். நிதி பரிமாற்றமும் ஓகே தான்.

என்ன செய்ய போறாங்க?

அசம்பிளி கூட்டத்தில என்ன பேசணும்னு, ஹோம் ஒர்க் செய்து வராராம் எதிர்க்கட்சித் தலைவரு. விலைவாசி பிரச்னையை கையில் எடுக்க போறாராம்.அவரோட கட்சியின் மாநிலத் தலைவரோடும் அசம்பிளி விவாதம் பற்றி ஆலோசனை நடத்திருக்காரு. மற்றவங்களையும் உசுப்பேத்தி, தயார் ஆவதற்கு நோட்டீசும் கொடுத்திருக்காராம். ஊழல், முறைகேடு, விபரங்கள் ஆதாரத்தோடு கிழிக்கணும்னு சொல்லி இருக்காரு. அப்புடி ஒண்ணுமே பெரிசா சிக்கலன்னு பலரோடு பதில்கள் கசிந்திருக்கு.வெள்ள நிவாரணம், மகா மாரி தடுப்பூசி விவகாரம் என பல கணக்குகளுடன் மனக்கோட்டை கட்டி இருக்காரு.

அணி மாறினாலும் நம்பலையே!

வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கி, டெல்லி விசாரணைக்கு அடிக்கடி போய் வரும் சா.ராஜ் பேட்டைக்காரரு அலட்டலே இல்லாமல் இப்போ அடங்கி இருக்காரு. இவரால் தான் கை கட்சியில் யார் முதல்வர் என்ற பிரச்னை உருவானது. இவர் கொளுத்திப்போட்டு சூடேற்றினது இன்னும் ஓயவே இல்லை.இவரு எதிர்க் கட்சி தலைவரோட ஆளு. ஆனாலும் ரெய்டு சிக்கலுக்கு பெறகு எதிர்க்கட்சித் தலைவரை காட்டிலும், மாநில கட்சித்தலைவரோட தான் அதிகமான நெருக்கத்தை காண்பித்து வராரு.கோஷ்டி விட்டு தாவினாலும் இவர் யாரோட ஆளுன்னு, எல்லோருக்கும் தெரியுமே. 'திகார்' உறவு நிலைக்காதுன்னு கை காரங்க பேசிக்கிறாங்க!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X