விநாயகரை வணங்கிய குமாரசாமி

Added : செப் 10, 2021
Share
Advertisement
ராம்நகர்:ராம்நகர் மாவட்டம், பிடதியில் உள்ள தன் பண்ணை வீட்டில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டார்.மனைவியும், எம்.எல்.ஏ.,வுமான அனிதா, மகன் நிகில், மறுமகள் ரேவதி ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர். பண்ணையில் வளர்க்கும் கன்று குட்டிகளுக்கும் பூஜை செய்தார்.பின், அவர் கூறியதாவது:உலகில் கொரோனா நீங்கி மக்கள் செழிப்புடன் வாழ
 விநாயகரை வணங்கிய குமாரசாமி

ராம்நகர்:ராம்நகர் மாவட்டம், பிடதியில் உள்ள தன் பண்ணை வீட்டில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டார்.
மனைவியும், எம்.எல்.ஏ.,வுமான அனிதா, மகன் நிகில், மறுமகள் ரேவதி ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர். பண்ணையில் வளர்க்கும் கன்று குட்டிகளுக்கும் பூஜை செய்தார்.பின், அவர் கூறியதாவது:உலகில் கொரோனா நீங்கி மக்கள் செழிப்புடன் வாழ வேண்டும்; கஷ்டங்கள் நீங்க வேண்டும். கலபுரகி மாநகராட்சியில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சட்டசபை கூட்டத்தொடரை ஒட்டி, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில், பெங்களூரு ஹலசூரு ஏரி அருகில் உள்ள தனியார் ஓட்டலில், வரும், 13 ல், இரவு 7:00 மணிக்கு, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டம் தொடர்பாக, ம.ஜ.த., தலைமை கொறடா வெங்கடராவ் நாடகவுடா, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X