பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை உயர்வை ரத்து செய்ய சங்க கூட்டத்தில் தீர்மானம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை நகராட்சியில் கடைவாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், செயலாளர் ஷாஜிஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சங்க தலைவர் ஜெபராஜ் கலந்து கொண்டு பேசுகையில், ''வால்பாறை நகர் புதுமார்க்கெட், குமரன்ரோடு ஆகிய

வால்பாறை:வால்பாறை நகராட்சியில் கடைவாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், செயலாளர் ஷாஜிஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சங்க தலைவர் ஜெபராஜ் கலந்து கொண்டு பேசுகையில், ''வால்பாறை நகர் புதுமார்க்கெட், குமரன்ரோடு ஆகிய பகுதிகளில், நகராட்சிக்கு சொந்தமான, 300 கடைகள் உள்ளன.

வனவிலங்கு - மனித மோதலால் தொழிலாளர்கள் தொடர்ந்து எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகராட்சியில் கடை வாடகை உயர்த்தப்பட்டதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,'' இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X