சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருமங்கலம்:கல்லுாரி மாணவர்கள் இருவரிடம், கத்தி முனையில் மூன்றரை சவரன் நகை, இரண்டு மொபைல் போன்களை பறித்துச் சென்ற ஆறு பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லிவாக்கம், சிட்கோ நகர், 49வது தெருவைச் சேர்ந்தவர் ருத்ரா, 26; பச்சையப்பன் கல்லுாரியில், பிஎச்.டி., படிக்கிறார். பகுதி நேரமாக, 'கேட்டரிங்' வேலை செய்கிறார்.நேற்று அதிகாலை 2:45 மணிக்கு மேடவாக்கத்திலிருந்து

திருமங்கலம்:கல்லுாரி மாணவர்கள் இருவரிடம், கத்தி முனையில் மூன்றரை சவரன் நகை, இரண்டு மொபைல் போன்களை பறித்துச் சென்ற ஆறு பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லிவாக்கம், சிட்கோ நகர், 49வது தெருவைச் சேர்ந்தவர் ருத்ரா, 26; பச்சையப்பன் கல்லுாரியில், பிஎச்.டி., படிக்கிறார். பகுதி நேரமாக, 'கேட்டரிங்' வேலை செய்கிறார்.நேற்று அதிகாலை 2:45 மணிக்கு மேடவாக்கத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பாடி மேம்பாலம் அருகே பெட்ரோல் இல்லாமல் வாகனம் நின்றுள்ளது.

அப்போது, இருட்டில் மறைந்திருந்த மூவர், அவரை கத்தி முனையில் மேம்பாலம் கீழே அழைத்துச் சென்று, அவரது உடைகளை கழட்டி, சரமாரியாக அடித்து, அவரிடமிருந்த, 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து தப்பியுள்ளனர்.இதேபோல், பாடி பாண்டுரங்கபுரத்தைச் சேர்ந்த பரத், 20, என்ற கல்லுாரி மாணவர், பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை சென்றார்.

அப்போது, ஒரு சிறுவன் 'லிப்ட்' கேட்கவே, வாகனத்தை நிறுத்தியுள்ளார். அருகே மறைந்திருந்த மூன்று மர்ம நபர்கள், கத்தி முனையில் அவரிடமிருந்து மூன்றரை சவரன் நகை, 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து தப்பினர்.இவ்விரு சம்பவங்கள் குறித்து, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X