பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை கவரும் சுற்றுச்சூழல் ஓவியம்: மாநகராட்சி அசத்தல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
அமைந்தகரை:நெல்சன் மாணிக்கம் சாலையில், சுற்றுச்சுவரில் மாநகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ள ஓவியம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சென்னையை அழகு படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியினர் எடுத்து வருகின்றனர். சென்னை முழுதும் பொது இடங்கள், சுவர்களில், மேம்பால துாண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.பொது இடங்களில் தடையை மீறி
 மக்களை கவரும் சுற்றுச்சூழல் ஓவியம்: மாநகராட்சி அசத்தல்

அமைந்தகரை:நெல்சன் மாணிக்கம் சாலையில், சுற்றுச்சுவரில் மாநகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ள ஓவியம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சென்னையை அழகு படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியினர் எடுத்து வருகின்றனர். சென்னை முழுதும் பொது இடங்கள், சுவர்களில், மேம்பால துாண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.பொது இடங்களில் தடையை மீறி போஸ்டர் ஒட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, தற்போது பொது இடங்களில் உள்ள சுவர்கள் மட்டுமின்றி கழிப்பறைகளிலும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட நெல்சன் மாணிக்கம் சாலையில், மாநகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஓவியம், மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுகுறித்து செயற்பொறியாளர் இனியன் கூறுகையில், ''அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பிரதான சாலைகளின் சந்திப்பில் உள்ள செயற்கை நீரூற்றுகள் புனரமைக்கப்பட்டு. வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ''தொடர்ந்து சாலை தடுப்புகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X