கொலை மிரட்டல் வாலிபரிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல் வாலிபரிடம் விசாரணை

Added : செப் 10, 2021
Share
ஆயிரம்விளக்கு:கடையிலிருந்த பாலை திருடியதோடு, வியாபாரியை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய வாலிபரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.ஆயிரம்விளக்கு, மக்கிஸ் கார்டன், காளியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 45; பால் வியாபாரி. நேற்று காலை, கடையில் பாலை இறக்கிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பேகம்சாகிப், 2வது தெருவைச் சேர்ந்த மேத்யூ வசந்த் 20, என்பவர்,

ஆயிரம்விளக்கு:கடையிலிருந்த பாலை திருடியதோடு, வியாபாரியை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய வாலிபரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆயிரம்விளக்கு, மக்கிஸ் கார்டன், காளியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 45; பால் வியாபாரி. நேற்று காலை, கடையில் பாலை இறக்கிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பேகம்சாகிப், 2வது தெருவைச் சேர்ந்த மேத்யூ வசந்த் 20, என்பவர், கத்தியால் ஆட்டோவை சேதப்படுத்தி உள்ளார்.

தொடர்ந்து, கடையிலிருந்த பால் பாக்கெட்டை திருடி, வியாபாரியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.கமலக்கண்ணன் அளித்த புகாரின்படி, மேத்யூ வசந்தை பிடித்து, ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X