நீல நிற குடை ஏன்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நீல நிற குடை ஏன்?

Added : செப் 10, 2021
நீல நிற குடை ஏன்?'கடைசியில் மம்தா பானர்ஜியும், 'சென்டிமென்ட்' கலாசாரத்துக்கு அடிமையாகி விட்டாரே...' என, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்துடன் பேசப்படுகிறது. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம், சமீப காலமாக ஒரு மாற்றம் தென்படுவதைப் பார்க்கலாம். வெளியில் எங்கு சென்றாலும் கையில் நீல நிற குடையை எடுத்துச் செல்கிறார்.

அக்கம் பக்கம்


நீல நிற குடை ஏன்?



'கடைசியில் மம்தா பானர்ஜியும், 'சென்டிமென்ட்' கலாசாரத்துக்கு அடிமையாகி விட்டாரே...' என, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்துடன் பேசப்படுகிறது. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம், சமீப காலமாக ஒரு மாற்றம் தென்படுவதைப் பார்க்கலாம். வெளியில் எங்கு சென்றாலும் கையில் நீல நிற குடையை எடுத்துச் செல்கிறார். வெளியிடங்களில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது அந்த குடையை தனக்குத் தானே பிடித்தபடி இருப்பதையும் காணலாம். மம்தாவிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என அவருக்கு நெருக்கமானோர் கூட குழப்பம் அடைந்துள்ளனர். சமீபத்தில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் போது, பிரதமர் மோடி தனக்குத் தானே குடை பிடித்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.'பிரதமர் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்' என, பா.ஜ.,வினர் அவரை
பாராட்டினர். சமூக ஊடகங்களிலும் அவருக்கு பாராட்டு குவிந்தது.

இதைப் பார்த்து தான், மம்தாவும் குடையும், கையுமாக உலா வருவதாக கூறப்பட்டது. பா.ஜ.,வினரோ, 'குடையுடன் செல்வது பெரிய விஷயமல்ல; ஆனால் எதற்கு நீல நிற குடையை வைத்துள்ளார். ஜோதிடர்களின் ஆலோசனைப்படி இப்படி செய்கிறார்' என கிண்டலடிக்கின்றனர். 'பகுத்தறிவு கொள்கையில் ஊறி திளைத்தோர் கூட, மஞ்சள் சால்வையுடன் வலம் வந்த காலம் உண்டு. அதுபோலத் தான் இதுவும்' என்கின்றன, அரசியல்

வட்டாரங்கள்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X