தீ விபத்தில் மூதாட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் மூதாட்டி பலி

Added : செப் 10, 2021
Share
எண்ணுார்:மெழுகுவர்த்தி, ஆடையில் தீப்பிடித்து, மூதாட்டி பலியானார். சென்னை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, 28 வது பிளாக்கில், ரமீஸாபானு, 62. என்ற மூதாட்டி, தனியே வசிக்கிறார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மின்சாரம் இல்லாததால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து உறங்கினார். அதிகாலை, திடீரென அவரது வீட்டில் இருந்து, அலறல் சத்தம்

எண்ணுார்:மெழுகுவர்த்தி, ஆடையில் தீப்பிடித்து, மூதாட்டி பலியானார்.

சென்னை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, 28 வது பிளாக்கில், ரமீஸாபானு, 62. என்ற மூதாட்டி, தனியே வசிக்கிறார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மின்சாரம் இல்லாததால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து உறங்கினார். அதிகாலை, திடீரென அவரது வீட்டில் இருந்து, அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர், கதவை திறந்து பார்த்த போது, தீயில் சிக்கி ரமீஸாபானு படுகாயத்துடன் இருந்தார்.அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார். எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X