சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'நோக்கு கூலி' தெரியுமா?

Added : செப் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'நோக்கு கூலி' தெரியுமா?ஆர்.கோவிந்தன், பொட்டல்புதுார்,தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏழாம் அறிவு படத்தால், நோக்கு வர்மம் என்ற கலை குறித்து அறிந்தோம். 'நோக்கு கூலி' என ஒன்று உண்டு; அது பற்றி தெரியுமா?நம் அண்டை மாநிலமான, கம்யூ., ஆட்சி நடக்கும் கேரளாவில் தான் நோக்கு கூலி என்ற அடாவடி முறை நீண்ட காலமான கடைப்பிடிக்கப்படுகிறது. நோக்கு கூலி என்றால்,


'நோக்கு கூலி' தெரியுமா?ஆர்.கோவிந்தன், பொட்டல்புதுார்,தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏழாம் அறிவு படத்தால், நோக்கு வர்மம் என்ற கலை குறித்து அறிந்தோம். 'நோக்கு கூலி' என ஒன்று உண்டு; அது பற்றி தெரியுமா?நம் அண்டை மாநிலமான, கம்யூ., ஆட்சி நடக்கும் கேரளாவில் தான் நோக்கு கூலி என்ற அடாவடி முறை நீண்ட காலமான கடைப்பிடிக்கப்படுகிறது. நோக்கு கூலி என்றால், வேடிக்கை பார்ப்போருக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.ஒரு நிறுவனம், இயந்திரம் வாயிலாக பணி மேற்கொள்ளும் போது தொழிலாளர்கள் பணியிடத்திற்கு வந்து அமர்ந்து ஏழு மணி நேரம் வேடிக்கை பார்த்து, அடாவடியாக சம்பளம் வாங்குவர். இதற்கு பெயர் தான் நோக்கு கூலி!
உங்களுக்கு சொந்தமான சுமையை வேறொருவர் சுமந்து வந்து, நீங்கள் குறிப்பிடும் இடத்தில் சேர்த்தால், அதற்கு கூலி கொடுக்க வேண்டும். அது தான் நியாயம்.ஆனால் கம்யூனிஸ்ட் கொள்கைப்படி, உங்களுக்கு சொந்தமான சுமையை நீங்களே சுமந்து வந்தாலும், நோக்கு கூலி என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத மற்றொருவருக்கு பணம் கொடுக்க வேண்டும்.
இத்தனை ஆண்டுகளாக கேரளாவில் நடந்து வந்த இந்த அநியாயம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் இருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு, ஒரு பிரமாண்டமான இயந்திரம் வாகனத்தில் வந்திருக்கிறது.அதை பளு துாக்கும் இயந்திரத்தால் மட்டுமே இறக்கி வைக்க முடியும். 1,000 தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தாலும் அதை அசைக்க கூட முடியாது.அந்த இயந்திரத்தை ஏற்றி வந்த லாரியை மடக்கிய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர், நோக்கு கூலி கேட்டு அடாவடி செய்திருக்கின்றனர். கடந்த 2018ல் கேரள அரசு நோக்கு கூலி முறையை ரத்து செய்தது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகமாக இருக்கும் கேரளாவில் அதற்கு எல்லாம் மதிப்பு இருக்குமா?வேலை பார்த்தால் சம்பளம் கொடுக்கலாம். வேடிக்கை பார்ப்பதற்கு சம்பளம் கேட்பதெல்லாம் கம்யூனிஸ்ட் கொள்கைப்படி நியாயம்!நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்... உருப்படுமா இந்த நாடு?தொழிற்சாலைகள் எதுவும் கேரளாவில் துவங்காததற்கான காரணம் இப்போது தெரிகிறதா?நம் வீட்டிற்குள் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் அடாவடியாக நுழைந்து, சமையலறையில் புகுந்து, தயாரிக்கப்பட்ட உணவை பார்வையிட்ட பின், 'கூலி தாருங்கள்' என, நம்மை மிரட்டாமல்
உள்ளனரே... அது வரையில் மகிழ்ச்சி!


சுதந்திரபோராட்டவீரரா அவர்?ஆர்.பழனிசாமி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி துவங்கிய பின், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டு, திராவிடத் தலைவர்கள் முன்னிறுத்தப்பட்டனர்.'இது ஈ.வெ.ரா., மண்' எனக் கூறி, தியாகிகளின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தனர்.திராவிடத் தலைவர்கள் இந்நாட்டிற்காக என்ன தியாகம் செய்தனர் என்பதை யாராவது பட்டியலிட முடியுமா?இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் உப்பு சத்தியாகிரகமும், வெள்ளையனே வெளியேறு இயக்கமும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை.ஈ.வெ.ரா.,வை சுதந்திர போராட்ட வீரர் எனக் கூறி புளகாங்கிதம் கொள்ளும் திராவிட இயக்கத்தினர், இந்த போராட்டங்களில் ஒன்றிலாவது அவர் பங்கேற்றாரா என்பதை விளக்க வேண்டும்.உப்பு சத்தியாகிரகத்தில் யாரும் பங்கெடுக்கக் கூடாது என, தன் ஆதரவாளர்களுக்கு ஈ.வெ.ரா., உத்தரவு பிறப்பித்தது வரலாற்று பதிவுகளில் உள்ளது.தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என விமர்சித்த ஈ.வெ.ரா.,வை தான், 'தமிழின தலைவர்' என பட்டம் சூட்டி மகிழ்கின்றனர் திராவிட ஆட்சியாளர்கள்.இந்திய சுதந்திர நாளை கறுப்பு தினமாக அனுசரித்த ஈ.வெ.ரா.,வை, இன்று சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இணைத்துள்ளனர் தி.மு.க., ஆட்சியாளர்கள்.திராவிடக் கழகங்களின் சாதனை என்னவென்றால், இன்றைய மாணவர்களுக்கு தமிழும் தெரியாது; ஆங்கிலமும் வராது; ஹிந்தியும் புரியாது என்ற நிலையை உருவாக்கியது தான்.ஈ.வெ.ரா.,வை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக, உண்மையான சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுபடுத்தாதீர் தி.மு.க., ஆட்சியாளர்களே!


எங்களைவஞ்சிக்காதீர்!கே.செந்தில்வேல், ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர், அரசு விரைவு போக்குவரத்து கழகம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசு போக்குவரத்து துறை, 1975ல் போக்குவரத்து கழகமாக மாறியவுடன், அதன் ஊழியர்கள் அரசு பணியாளர்கள் என்ற அந்தஸ்தையும், ஓய்வூதிய பலனையும் இழந்தனர்.நீண்ட போராட்டத்திற்கு பின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1998ல் ஊதிய ஒப்பந்தத்தின் வாயிலாக, அரசு ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.மத்திய வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ல் இருந்து விலக்கு பெற்று, 1998 செப்., 1 முதல், போக்குவரத்து
தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, 1998 முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்.அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் நிர்வாக திறமையின்மையால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வும், ஊதியஒப்பந்தப்படி திருத்தப்பட்ட ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.மற்ற அரசு துறைகளை போல, போக்குவரத்து கழகத்திலும் நஷ்டம் உண்டு.ஆனால், மின் வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்வும், ஊதிய ஒப்பந்தப்படி திருத்தப்பட்ட ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், போக்குவரத்து தொழிலாளிகளுக்கு மட்டும் அது வழங்கவில்லையே ஏன்?நாங்கள் கேட்பது நீதிமன்ற ஆணையின்படி, தொழிலாளர் நல ஆணையர் மற்றும் முன்னாள் போக்குவரத்து துறைச் செயலர் ஒப்புக் கொண்டபடி, நியாயமாக கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மட்டுமே.ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஓய்வூதியத்தில் மாற்றம் வரும் என நம்பியிருந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின், 85 ஆயிரம் பேரின் குடும்பத்தை, தி.மு.க., அரசும்
வஞ்சிக்கக் கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
11-செப்-202110:31:35 IST Report Abuse
Vaiyapuri Rajendran அய்யா, வணக்கம், இது உங்கள் இடம். என்று தலைப்பிட்டு வரும் கருத்துக்களை நன்கு அறிவேன்....நானும் இதுவரை பலமுறை அனுப்பி உள்ளேன் அதனை பிரசுரிக்க மறுப்பதாக நினைக்கிறேன் ..இப்போதும் இன்று உங்கள் கையில் கிடைக்கும் வகையில் ஒரு கடிதம் அனுப்பி உள்ளேன்..அதனை பிரசுரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
11-செப்-202103:53:18 IST Report Abuse
NicoleThomson நோக்குக்குலி நாடு என்று மலையாளத்தானை அழைக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X