நகை மதிப்பீட்டாளர் ஏரியில் மூழ்கி பலி| Dinamalar

நகை மதிப்பீட்டாளர் ஏரியில் மூழ்கி பலி

Added : செப் 10, 2021
மடிப்பாக்கம்:சேவலுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க சென்ற நகை மதிப்பீட்டாளர் ஒருவர், ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.சென்னை, பல்லாவரம், கணபதிநகர், முதல் தெருவை சேர்ந்தவர் இர்சாத், 25; தனியார் நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார்.தான் வளர்த்து வரும் சேவலுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க, நண்பர்கள் மூவருடன் கீழ்கட்டளை ஏரிக்கு நேற்று முன்தினம் மாலை

மடிப்பாக்கம்:சேவலுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க சென்ற நகை மதிப்பீட்டாளர் ஒருவர், ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

சென்னை, பல்லாவரம், கணபதிநகர், முதல் தெருவை சேர்ந்தவர் இர்சாத், 25; தனியார் நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார்.தான் வளர்த்து வரும் சேவலுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க, நண்பர்கள் மூவருடன் கீழ்கட்டளை ஏரிக்கு நேற்று முன்தினம் மாலை சென்றார்.

ஏரியில் சேவலுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த இர்சாத், திடீரென நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை ஏரியில் மிதந்த அவரது உடலை மீட்டனர். மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X