கிண்டி நிலைய நடை மேம்பால பணி ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:கிண்டி ரயில் நிலைய நடை மேம்பால பணி, வேலை ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளது.தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்தில், கிண்டி ரயில் நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது. நிலையத்திற்கு செல்ல ஒரு நடை மேம்பாலம் மட்டும் உள்ளது.நடை மேம்பாலத்தில் கூட்ட நெருக்கடியை தவிர்க்க, கிண்டி மெட்ரோ நிலையம் - புறநகர் மின்சார ரயில் நிலையம் - ரேஸ்கோர்ஸ் சாலை இடையே,
 கிண்டி நிலைய நடை மேம்பால பணி ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தம்

சென்னை:கிண்டி ரயில் நிலைய நடை மேம்பால பணி, வேலை ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்தில், கிண்டி ரயில் நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது. நிலையத்திற்கு செல்ல ஒரு நடை மேம்பாலம் மட்டும் உள்ளது.நடை மேம்பாலத்தில் கூட்ட நெருக்கடியை தவிர்க்க, கிண்டி மெட்ரோ நிலையம் - புறநகர் மின்சார ரயில் நிலையம் - ரேஸ்கோர்ஸ் சாலை இடையே, நிலையத்தின் அனைத்து நடைமேடைகள் மீது ஒரு நடை மேம்பாலமும், நிலைய அதிகாரி அலுவலகம் அருகே மேற்கு பக்கத்தில் இருந்து, கிழக்கு பக்கம் புறநகர் ரயில் டிக்கெட் கட்டடம் வரை மற்றொரு நடைமேம்பாலமும் கட்ட திட்டமிடப்பட்டது.

இதில், நிலைய அதிகாரி அலுவலகம் அருகே, நடை மேம்பால கட்டுமான பணிகள் 2020 பிப்ரவரியில் துவங்கி, இவ்வாண்டு மார்ச் 31க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இரண்டாவது நடை மேம்பாலம், 2020 ஜூனில் துவங்கி, இவ்வாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப் பட்டது.நிலைய அதிகாரி அலுவலகம் அருகே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலத்துக்கு, கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இப்பாலம் அமைக்க, மூன்று மற்றும் நான்காவது நடைமேடையில், துாண்கள் கட்டுவதற்கு, பள்ளம் தோண்டபட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.இப்பணி முடிந்தால் தான், துாண்கள் மீது இரும்பு துாண்கள் இணைக்கப்பட்டு, அதன் மீது நடை மேம்பாலம் கட்ட முடியும். மந்த கதியில் நடந்து வந்த வேலைகள், இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர் கட்டுமான செலவு அதிகரித்துள்ளதாலும், வேலை ஆட்கள் பற்றாக்குறையாலும் பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

நடை மேம்பால கட்டுமான பணியை, தாமதமின்றி மீண்டும் துவங்கி விரைவாக முடிக்க வேண்டும். கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, புறநகர் மின்சார நிலையம் வழியாக, ரேஸ்கோர்ஸ் பஸ் நிறுத்தம் வரையான நடை மேம்பால பணியையும் தாமதமின்றி துவங்க வேண்டும்.இந்த நடை மேம்பால பணிகள் முடிந்தால், விரைவாக நிலையங்களுக்கு மாறி சென்று, மெட்ரோ, மின்சார ரயில்களில் தாமதமின்றி பயணம் செய்ய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X