பிரதமர் பிறந்த நாளில் தீவிர தடுப்பூசி பிரசாரம்

Updated : செப் 12, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக, பா.ஜ., தொண்டர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இதுவரை 72.37 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்கள்
பிரதமர் பிறந்த நாள், தீவிரம், தடுப்பூசி பிரசாரம்

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக, பா.ஜ., தொண்டர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இதுவரை 72.37 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை விரைந்து செலுத்தி முடிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாள் செப்., 17ம் தேதி கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக, அன்றைய தினம் அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பா.ஜ.,வினர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியதாவது:பிரதமர் மோடியின் பிறந்த நாளன்று, நாடு முழுதும் உள்ள பா.ஜ., தொண்டர்கள் சிறப்பு தடுப்பூசி பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வைக்கும் பணிகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர்.கடந்த 43 நாட்களில், 6.88 லட்சம் தன்னார்வலர்களுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுடன் 18 ஆயிரம் டாக்டர்களும் பணியாற்ற உள்ளனர்.

இவர்களின் முயற்சியால், பிரதமர் பிறந்த நாளன்று அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசிகளின் சாதனையை அன்றைய தினம் முறியடித்துக் காட்டுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-செப்-202108:16:27 IST Report Abuse
Kasimani Baskaran நல்ல விசயம். எல்லோருக்கும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டு முடித்தால் ஓரளவுக்கு பாதுகாப்பு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X