பவானிபுர் தொகுதியில் போட்டி:மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோல்கட்டா:பவானிபுர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிட, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனினும், ஒட்டு மொத்த தேர்தலில் திரிணமுல் காங்., அமோக வெற்றி
 பவானிபுர் தொகுதியில் போட்டி:மம்தா பானர்ஜி  வேட்பு மனு தாக்கல்

கோல்கட்டா:பவானிபுர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிட, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.
எனினும், ஒட்டு மொத்த தேர்தலில் திரிணமுல் காங்., அமோக வெற்றி பெற்றதால், மூன்றாவது முறையாக முதல்வராக மம்தா பதவிஏற்றார். இதனால், ஆறு மாதத்துக்குள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்ற நிலையில், மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, பவானிபுர் எம்.எல்.ஏ.,வும், வேளாண் அமைச்சருமான சோபன்தேவ் சாட்டர்ஜி, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபுர், ஜாங்கிபுர், சமர்கஞ்ச் ஆகிய முன்று தொகுதிகளுக்கு வரும் 30-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமுல் காங்., கட்சி அறிவித்துள்ளது.இதன்படி, பவானிபுர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரேவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது.இந்நிலையில், பவானிபுர் தொகுதியில் போட்டியிடுவதற்காக மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X