'ஜெய் மாதா தி' கோஷமிடும்படி தொண்டர்களிடம் கூறிய ராகுல்

Updated : செப் 12, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (12+ 45)
Share
Advertisement
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற காங்., - எம்.பி., ராகுல், அங்கு நடந்த கூட்டத்தில் 'ஜெய் மாதா தி' என கோஷமிடும் படி தொண்டர்களிடம் கூறினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி., யுமான ராகுல், இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜம்மு - காஷ்மீர் சென்றார். முதற்கட்டமாக கடராவில் இருந்து வைஷ்ணவி தேவி கோவிலுக்கு நடைபயணமாக சென்றார்.இவரது 14 கி.மீ.,
ஜெய் மாதா தி  கோஷம்,    ராகுல்

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற காங்., - எம்.பி., ராகுல், அங்கு நடந்த கூட்டத்தில் 'ஜெய் மாதா தி' என கோஷமிடும் படி தொண்டர்களிடம் கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி., யுமான ராகுல், இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜம்மு - காஷ்மீர் சென்றார். முதற்கட்டமாக கடராவில் இருந்து வைஷ்ணவி தேவி கோவிலுக்கு நடைபயணமாக சென்றார்.இவரது 14 கி.மீ., நடை பயணத்தில் எம்.பி.,க்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கட்சிக் கொடிகளை பிடித்தபடி உடன் சென்றனர்.

பின், ஜம்முவில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், மேடையில் இருந்தபடி அங்கிருந்த கட்சியினரிடம் 'ஜெய் மாதா தி' என கோஷமிடும்படி கூறினார்.வட மாநிலங்களில் அம்மன் கோவில்களில் ஹிந்துக்கள் வழிபாட்டிற்காக கூறும் இந்த வார்த்தையை, திரும்ப திரும்பச் சொல்லும்படி அவர் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., மீது, அரசியலுடன் மதத்தை இணைப்பதாக குற்றச்சாட்டு சுமத்தும் வழக்கம் உடைய ராகுல், இதுபோல் வழிபாட்டு கோஷம் எழுப்பும்படி கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம், ''நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன். அரசியல் ரீதியான கருத்துகள் கூற விரும்பவில்லை,'' என, ராகுல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12+ 45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
11-செப்-202118:24:13 IST Report Abuse
DVRR ஜெ ஸ்ரீ ராம் என்று சொல்லி முஸ்லீம் மும்தாஜுக்கு கோபம் வந்து அவர்களை கைது செய்ததின் விளைவாக அவர்களுக்கு இந்த அறிவுரை ஜெ மாதா தி??என்ன பப்பு சரிதானே???
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
11-செப்-202113:18:11 IST Report Abuse
vbs manian uduppi sringeri pondra yidangalukku sendrathu gyabagam varugirathu. மனதில் இல்லாமல் வேஷம் எவ்வளவு நாள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-செப்-202112:40:25 IST Report Abuse
sankaseshan படா கில்லடிப்பா ராவுளு. தேர்தல் வரும்போதெல்லாம் கோவில் கோவிலா சுத்துவான் . ஜெய் மாதா தி என்று கோஷம் போடறவன் பாரத் மாதா கி ஜெய் , ஜைஹிந்த் என்று சொல்லுவா நா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X