பொது செய்தி

இந்தியா

இணையதள செய்தி நிறுவனங்களில் 'ரெய்டு'

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :'நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்டரி' இணையதள செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களில் இன்று (செப்.10) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக நிதி கடந்த பிப்.,ல், 9.59 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக நிதி பெற்றதாக நியூஸ்கிளிக் என்ற இணையதள செய்தி நிறுவனத்தின்மீது, டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், சட்டவிரோத
இணையதள செய்தி நிறுவனங்களில் 'ரெய்டு'

புதுடில்லி :'நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்டரி' இணையதள செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களில் இன்று (செப்.10) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.


சட்டவிரோதமாக நிதி


கடந்த பிப்.,ல், 9.59 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக நிதி பெற்றதாக நியூஸ்கிளிக் என்ற இணையதள செய்தி நிறுவனத்தின்மீது, டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


latest tamil news


இதையடுத்து நியூஸ்கிளிக் நிறுவனரும், ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நியூஸ்கிளிக் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று (செப்.10) அதிரடியாக சோதனை நடத்தினர்.

மற்றொரு இணையதள செய்தி நிறுவனமான நியூஸ்லாண்டரி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.


ஆய்வு



இந்த நிறுவனங்கள் செலுத்தும் வரி தொடர்பான விபரங்களை ஆய்வு செய்யவே, இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோதனையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த சோதனை குறித்து இந்த நிறுவனங்கள் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-செப்-202110:37:09 IST Report Abuse
duruvasar ஐயோ பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறார்களே. ?
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
11-செப்-202108:14:02 IST Report Abuse
 N.Purushothaman நியூஸ் லாண்டரி ஒரு மூன்றாந்தர இணையதள செய்தி நிறுவனம் .....நம்ம ஊரு மீசைக்கார பத்திரிக்கை மாதிரி ......இந்தியாவில் பத்திரிக்கை ஊடகங்கள் மேல் எள்ளளவும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கு இது போன்ற நிறுவனங்கள் தான் காரணம் .....
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
11-செப்-202105:41:11 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழகத்தில் ஊழல் பணம் குவித்து வைக்கப்பட்டுள்ள அந்த ஊழல் கம்பெனியின் அறக்கட்டளையில் எப்போது சோதனை நடத்த திட்டம் உள்ளது ஆபீசர்ஸ்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X