துவாரே சர்கார்' முகாமில் கலந்துகொண்ட குடிமக்களுக்கு மம்தா நன்றி

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோல்கட்டா: 'உங்கள் வீட்டு வாசலில் அரசு' என்ற பொருள் கொண்ட துவாரே சர்க்கார் திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா அம்மாநிலத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி மேற்குவங்கத்தில் ஒவ்வொரு தெருவிலும் அரசு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்மூலமாக அரசு திட்டங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. இதுவரை 3 கோடி மக்கள்

கோல்கட்டா: 'உங்கள் வீட்டு வாசலில் அரசு' என்ற பொருள் கொண்ட துவாரே சர்க்கார் திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா அம்மாநிலத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி மேற்குவங்கத்தில் ஒவ்வொரு தெருவிலும் அரசு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்மூலமாக அரசு திட்டங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.



latest tamil news



இதுவரை 3 கோடி மக்கள் இந்த திட்டம் மூலமாக பயன்பெற்றுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். இந்த அரசு முகாமில் கலந்துகொண்ட குடிமக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி துவங்கி இந்த திட்டம்மூலமாக மக்களுக்கு சேவை செய்த அரசு அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.


latest tamil news



மேற்கு வங்கத்தில் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், சுவாதிகா சத்தி என்கிற அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.இதன்மூலமாக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய்வரை மருத்துவ செலவுக்கு அரசு நிதி பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
11-செப்-202112:28:22 IST Report Abuse
தஞ்சை மன்னர் மம்தா இந்த முறை ஜெயித்து பி சே பி கும்பல் முகத்தில் கரி பூச வேண்டும் , ஒரு நல்ல முதல்வர் மீது களங்கம் ஏற்படுத்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சு சேர்ந்த குண்டர் படையை தலைவன் அவமானத்தால் நாண்டு கிட்டு செத்தான் என்ற செய்தி காதில் கேட்டு தேனை குடித்து போல இருக்கவேண்டும்
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
11-செப்-202120:32:21 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஉன் கதறல் ஆனந்தமா இருக்கு மூர்க்கனே...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-செப்-202110:35:13 IST Report Abuse
duruvasar கலந்துக்கவில்லை என்றல் அடித்தான் விழும் என்பதை மக்கள் புரிந்துகொண்டது தனி மனித சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
11-செப்-202110:12:11 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN முமைதா கதறுகிறார் மக்களைக் கவர புதிது புதிதாக திட்டங்கள் தீட்டுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X