எக்ஸ்குளுசிவ் செய்தி

'பார் கோடு' பதிவுடன் மது விற்பனை: 'டாஸ்மாக்' செயல்படுத்துவது எப்போது?

Updated : செப் 11, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: முறைகேட்டை தடுக்க, 'பார் கோடு' பதிவுடன், மது விற்பனை செய்யும் திட்டத்தை, டாஸ்மாக் விரைந்து செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, பல தரப்பினரிடமும் எழுந்துள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,400 கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய்க்கு மது வகைகளை விற்பனை செய்கிறது.முறைகேடுகள் தற்போது, கிடங்கில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மது வகைகள் கணினியில்
'பார் கோடு' பதிவுடன் மது விற்பனை: 'டாஸ்மாக்' செயல்படுத்துவது எப்போது?

சென்னை: முறைகேட்டை தடுக்க, 'பார் கோடு' பதிவுடன், மது விற்பனை செய்யும் திட்டத்தை, டாஸ்மாக் விரைந்து செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, பல தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,400 கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய்க்கு மது வகைகளை விற்பனை செய்கிறது.முறைகேடுகள் தற்போது, கிடங்கில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மது வகைகள் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. கடைகளில் அதிகம் விற்பனையாகும் மது வகை விபரங்களை மேற்பார்வையாளர்களிடம் கேட்டு, அதற்கு ஏற்ப கிடங்குகளில் இருந்து அனுப்பப்படுகிறது.

இதனால், விற்பனையை குறைத்து காட்டுவது, குறிப்பிட்ட மதுவுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.இதைத் தடுக்க, கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்புவது, 'குடி'மகன்களிடம் விற்பது என, அனைத்தையும் கணினிமயமாக்க, டாஸ்மாக் முடிவு செய்தது.

இதன்படி, தனியார் அங்காடிகளில் இருப்பது போல், மது கடைகளுக்கு, 'பார் கோடு' கருவி வழங்கப்பட்டு, ஒவ்வொரு மது வகைக்கும் தனி, 'பார் கோடு' எண் வழங்கப்படும். மது பாட்டிலை கருவியில், 'ஸ்கேன்' செய்து தான் விற்க வேண்டும்.இதனால், கிடங்குகள், கடைகளில் உள்ள மது இருப்பு, விற்பனை உள்ளிட்ட விபரங்களை இணையதளம் வாயிலாக, அதிகாரிகள் எங்கிருந்தபடியும், எப்போது வேண்டுமானாலும் அறிய முடியும்.

கணினிமயமாக்கும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2020 ஜூலையில் டெண்டர் கோரப்பட்டது. எதிர்பார்ப்புஅதில் பங்கேற்க பலமுறை அவகாசம் வழங்கிய நிலையில், சில நிறுவனங்கள் மட்டும் பங்கேற்றன.அவை வழங்கிய தொழில்நுட்ப புள்ளியும் திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு, சட்டசபை தேர்தல் போன்ற காரணங்களால், டாஸ்மாக் கணினியமாக்கும் பணி செயல்படுத்தவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. எனவே, முறைகேட்டை தடுக்க, மது விற்பனை முழுதும் கணினியமாக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


'ஆலோசனை கேளுங்க!'

தமிழகம் முழுதும் உள்ள, 35 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும், விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள், அவற்றில் பதிவு செய்து விற்கப்படுகின்றன. இதனால், கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு, விற்பனையை பொது வினியோக திட்ட இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியில், எங்கிருந்தபடியும் அறிய முடியும். உணவு மானியத்திற்காக, அரசுக்கு ஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.

அதே சமயம், டாஸ்மாக் நிறுவனத்தால், ஆண்டுக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அப்படி இருந்தும், கணினிமய பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, டாஸ்மாக், கணினிமய திட்டம் குறித்து, உணவு துறையிடம் ஆலோசனை கேட்டு, விரைந்து செயல்படுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202118:20:09 IST Report Abuse
Palanivel Rajan 0 ர்ரர
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X