பொது செய்தி

தமிழ்நாடு

விசாகப்பட்டினம் சென்றது 'விக்ரஹா' ரோந்து கப்பல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:விசாகப்பட்டின துறைமுகத்திற்கு முதல் முறையாக சென்ற புதிய ரோந்துக் கப்பல், 'விக்ரஹா'விற்கு, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.ஆழ்கடல் ரோந்துக் கப்பலான 'விக்ரஹா'வை, ஆக., 28ல், சென்னையில் நடந்த விழாவில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ரோந்துக் கப்பல், 98 மீட்டர் நீளம்; 15 மீட்டர் அகலம் உடையது. இரட்டை டீசல்
 விசாகப்பட்டினம் சென்றது 'விக்ரஹா' ரோந்து கப்பல்

சென்னை:விசாகப்பட்டின துறைமுகத்திற்கு முதல் முறையாக சென்ற புதிய ரோந்துக் கப்பல், 'விக்ரஹா'விற்கு, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆழ்கடல் ரோந்துக் கப்பலான 'விக்ரஹா'வை, ஆக., 28ல், சென்னையில் நடந்த விழாவில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ரோந்துக் கப்பல், 98 மீட்டர் நீளம்; 15 மீட்டர் அகலம் உடையது. இரட்டை டீசல் இன்ஜின்களால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல், அதிகபட்சம், 26 கடல் மைல் வேகத்தில் செல்லும். மேலும், 12.7 மி.மீ., ரக துப்பாக்கிகள் மற்றும்இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர், ரோந்துக் கப்பலின் செயல்பாட்டுத் திறன், கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புத் திறனை அதிகரிக்கும்.இது தவிர, நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், வழிகாட்டும் கருவிகள், எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் மாசுகளை தடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கமான்டண்ட் அனுாப் தலைமையில் இயங்கும் இந்த ரோந்துக் கப்பலில்,12 அதிகாரிகளும், 90 சிப்பந்திகளும் பணிபுரிகின்றனர்.இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தில் இணைந்த விக்ரஹா, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து, தன் சேவையை துவங்க உள்ளது.

இதற்காக இந்த ரோந்துக் கப்பல், சென்னை துறைமுகத்தில் இருந்து, விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. அங்கு, கப்பலுக்கு டி.ஐ.ஜி., யோகிந்தர் தாகா தலைமையிலான குழு, சிறப்பான வரவேற்பு அளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X