மக்களை தேடி மருத்துவம் 4 லட்சம் பேர் பயன்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம் 4 லட்சம் பேர் பயன்!

Added : செப் 10, 2021
Share
சென்னை:தமிழக அரசின், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.கொரோனா பெருந்தொற்று காரணமாக, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், உரிய சிகிச்சை பெற முடியாமலும், மருந்துகளை உட்கொள்ளாமலும், இறுதி கட்டத்தில் மருத்துவமனை வருவது அதிகரித்து வருகிறது.இவற்றை தவிர்க்கும் வகையில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, ஆக., 5ல் தமிழக அரசு

சென்னை:தமிழக அரசின், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், உரிய சிகிச்சை பெற முடியாமலும், மருந்துகளை உட்கொள்ளாமலும், இறுதி கட்டத்தில் மருத்துவமனை வருவது அதிகரித்து வருகிறது.இவற்றை தவிர்க்கும் வகையில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, ஆக., 5ல் தமிழக அரசு துவக்கி, செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்புள்ள நோயாளிகளுக்கான மருந்துகள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. தவிர, பிசியோதெரபி, டயாலிசிஸ் போன்ற சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், இதுவரை 4 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக 1.76 லட்சம் ரத்த அழுத்த நோயாளிகள், 1.17 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பயன் அடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X