சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி

Added : செப் 10, 2021
Share
Advertisement
காசிமேடு:தனியார் நிதி நிறுவனத்தில், கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலித்ததால், 10.81 லட்சம் ரூபாய் தப்பியது.கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் கிளை, சென்னை, ராயபுரம், எஸ்.என்., செட்டி சாலையில் செயல்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் பணிகள் முடித்து, ஷட்டரை மூடி விட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை வங்கி கிளையில்

காசிமேடு:தனியார் நிதி நிறுவனத்தில், கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலித்ததால், 10.81 லட்சம் ரூபாய் தப்பியது.

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் கிளை, சென்னை, ராயபுரம், எஸ்.என்., செட்டி சாலையில் செயல்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் பணிகள் முடித்து, ஷட்டரை மூடி விட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை வங்கி கிளையில் இருந்து அலாரம் ஒலித்ததால், திருச்சூரில் இருந்து, கிளை மேலாளர் சுஜாதாவிற்கும், தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காசிமேடு போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரைதளத்தின் நுழைவாயில் பூட்டு உடைக்கப்பட்டு, முதல் தளத்தில் இயங்கும் நிதி நிறுவனத்தின் ஷட்டர் கம்பி வளைக்கப்பட்டு, ௧ அடி உயரத்திற்கு துாக்கப்பட்டிருந்தது.

அலாரம் சத்தம் கேட்கவே பயந்து போன கொள்ளையர்கள், திருடும் முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது. இதனால், நிறுவன லாக்கரில் இருந்த, 10.81 லட்சம் ரூபாய் தப்பியது.இது குறித்து, காசிமேடு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X