பொது செய்தி

தமிழ்நாடு

'மொபைல் ஆப்' வாயிலாக புது வகை மோசடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:'மொபைல் ஆப் வாயிலாக, புது வகையான மோசடி நடப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பொதுமக்களுக்கு, மர்ம நபர்கள், அமேசான், பிளிப்காட், ஷாப்பி போன்ற நிறுவனங்களில், பகுதி நேர வேலை செய்து தினமும், 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என,

சென்னை:'மொபைல் ஆப் வாயிலாக, புது வகையான மோசடி நடப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பொதுமக்களுக்கு, மர்ம நபர்கள், அமேசான், பிளிப்காட், ஷாப்பி போன்ற நிறுவனங்களில், பகுதி நேர வேலை செய்து தினமும், 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என, குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில், 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் இணைவதற்கான 'லிங்க்' அனுப்புகின்றனர். அதை கிளிக் செய்தவுடன், ஒரு செயலி மொபைல்போனில் டவுன்லோடு ஆகிறது.

பின், மர்ம நபர்கள், வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் வாயிலாக, அந்த செயலி வாயிலாக சம்பாதிக்கும் வழிமுறைகளை தகவல்களாக தெரிவிக்கின்றனர்.அதன்படி, அந்த செயலியில் இணைந்தவுடன், போனஸ் தொகை, 101 ரூபாய், பொதுமக்களின் கணக்கில் இருப்பது போல காட்டுகிறது. பின், அந்த ரூபாயில், செயலியில் இருக்கும் பொருட்களை வாங்கி விற்குமாறு கூறுகின்றனர்.அந்த பொருட்களை வாங்கும் போது, பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பணம் செலுத்த வேண்டும்.

இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பொருட்கள் வாங்கும் போது, பொது மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் மர்ம நபர்கள், விற்கும் போது அதற்கான தொகையை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துவது இல்லை.ஆனால், செயலியில் மட்டும், விற்கப்பட்ட பொருளுக்கு பணம் தந்துவிட்டதை போல இருப்பு காட்டும். அந்த தொகையை பொதுமக்கள் எடுக்க முயலும் போது, ஏற்கனவே எடுத்துவிட்டது போல காட்டும்.

இதுபோன்ற புதுவகையான மோசடி தற்போது நடக்கிறது.அதேபோல, ஹனி மற்றும் மேக்கிங் என்ற பெயரிலும், மர்ம நபர்கள் மோசடிக்கு பயன்படுத்தும் செயலிகளை மக்களின் பயன்பாட்டிற்கு விட்டுள்ளனர். இவற்றை டவுன்லோடு செய்திருப்போர், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். மற்றவர்கள் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம். பகுதி நேர வேலை என, குறிஞ்செய்தி வாயிலாக லிங்க் அனுப்பி மோசடி செய்யும் நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X