சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி நபர் வீட்டின் முன் வாலிபர் தீக்குளித்து மரணம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சூளைமேடு:மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று, மோசடி செய்தவர் வீட்டு முன், வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சூளைமேடு, கில்நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் பழனிகுமார், 57; ரியல் எஸ்டேட் வேலை செய்பவர். இவர், பாலகிருஷ்ணன், 30, என்பவருக்கு, மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 23 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். வேலை வாங்கி தராத

சூளைமேடு:மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று, மோசடி செய்தவர் வீட்டு முன், வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சூளைமேடு, கில்நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் பழனிகுமார், 57; ரியல் எஸ்டேட் வேலை செய்பவர். இவர், பாலகிருஷ்ணன், 30, என்பவருக்கு, மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 23 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். வேலை வாங்கி தராத நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது, பாலகிருஷ்ணனுக்கு காசோலை கொடுத்துள்ளார். அது பணமின்றி திரும்பியுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த பாலகிருஷ்ணன், தான் கையில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் தீக்குளித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். பழனிகுமாரிடம், சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X