அரசியல் செய்தி

தமிழ்நாடு

புது கவர்னர் நியமனம் குறித்து காங்., கலக்கம்!

Updated : செப் 11, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (79)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தின் புதிய கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நியமனம், காங்கிரஸ் கட்சியிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், 'கிரண்பேடி போல் செயல்படுவாரோ...' என அச்சம் அடைந்துள்ளனர். அவர் பாதுகாப்புத் துறையிலிருந்து வருவது, பலரையும் பீதி அடைய வைத்துள்ளது.தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித், 2017 அக்டோபரில்
புது கவர்னர், நியமனம், காங்., கலக்கம்!

சென்னை : தமிழகத்தின் புதிய கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நியமனம், காங்கிரஸ் கட்சியிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், 'கிரண்பேடி போல் செயல்படுவாரோ...' என அச்சம் அடைந்துள்ளனர்.

அவர் பாதுகாப்புத் துறையிலிருந்து வருவது, பலரையும் பீதி அடைய வைத்துள்ளது.தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித், 2017 அக்டோபரில் பதவியேற்றார். நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவர் மாற்றப்படுவார் என தகவல் பரவியது. கடந்த மாதம் 31ம் தேதி, பஞ்சாப் மாநில கவர்னர் பதவியும், சண்டிகர் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர் பொறுப்பும், அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.
நிபுணத்துவம் பெற்றவர்இந்நிலையில், அவர் தமிழக கவர்னர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பஞ்சாப் மாநில கவர்னராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். நாகாலாந்து மாநில கவர்னராக உள்ள ஆர்.என்.ரவி, 69, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில், 1952 ஏப்., 3ல் பிறந்தவர். இவரது முழுப் பெயர் ரவீந்திர நாராயண ரவி. இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். சில காலம் பத்திரிகை துறையில் பணியாற்றினார். கடந்த 1976ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்றார்; கேரள மாநிலத்தில் பணி ஒதுக்கப்பட்டது. அங்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றினார்.

அதன்பின், மத்திய பணிக்கு மாற்றலாகி சென்றார். மத்திய புலனாய்வுத் துறை பணியில், ஊழல் மாபியாக்களுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றினார். மத்திய உளவுத்துறை பிரிவிலும் சிறப்பாக பணியாற்றினார். கடந்த 2014 முதல் கூட்டு புலனாய்வுக் குழு தலைவராக இருந்தார். நாகாலாந்தில் உள்ள ஆயுத குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, 2015ல் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாகஇருந்தார். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.கடந்த 2019 ஜூலை 20ல், நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார். தற்போது, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுஉள்ளார்.
முக்கியத்துவம்இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், பாதுகாப்புத் துறை, உளவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதேநேரம் அவரது நியமனம், தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, மோதல் போக்கு உள்ளது.


ஒன்றிய அரசு
மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழக ஆட்சியாளர்கள், மத்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், பாதுகாப்புத் துறையில் இருந்து ஒருவர் கவர்னராக வருவது, பல தரப்பினரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளிப்படையாக தன் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:முழுக்க முழுக்க போலீஸ் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை, நாகாலாந்து கவர்னராக மத்திய அரசு ஏற்கனவே நியமித்தது. தற்போது, அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே, இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதைக் கண்கூடாக சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

முன்னாள் போலீஸ் துறை அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரி கவர்னராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை, நாடே பார்த்து நகைத்தது.விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆர்.என்.ரவியை கவர்னராக மத்திய அரசு நியமித்திருக்கிறதோ என சந்தேகப்படுகிறேன்.புதிய கவர்னர், தமிழகத்தில் ஜனநாயக படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மத்திய அரசு முயன்றால், மக்களை திரட்டி, ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.அதேநேரம், ஆளும் கட்சியான தி.மு.க., தரப்பில், இது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை; முதல்வர் ஸ்டாலின், புதிய கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


எப்போதும் இல்லாத வகையில் நீண்ட விளக்கத்துடன் தலைவர்கள் வாழ்த்துஎப்போதும் இல்லாத வகையில், கவர்னர் பற்றிய பல்வேறு விபரங்களை குறிப்பிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது, புதிய கவர்னரின் வருகை, அனைத்து தரப்பினரிடமும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு, முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு என் வணக்கமும் வாழ்த்தும். தங்கள் வருகை தமிழகத்தின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும். தங்களை தமிழகம் வரவேற்கிறது.தமிழகத்தில் இருந்து விடைபெற்று, பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க இருக்கும் பன்வாரிலால் புரோஹித்தை, அன்புடனும், மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், முதல்வரானபோதும், தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர். குறுகிய காலம் பழகி இருந்தாலும், இனிமையான மறக்க முடியாததாக உங்கள் நட்பு அமைந்திருந்தது.
உங்களது பரந்த உள்ளம், பஞ்சாப் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையட்டும். தமிழகம் தங்களை வாழ்த்தி வழி அனுப்புகிறது.


எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:
கேரளாவில் சிறந்த காவல் துறை தலைமை அதிகாரியாகவும், நாகலாந்து மாநில கவர்னராகவும் சிறப்பாக பணியாற்றி, தற்போது தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்க உள்ள, பீஹாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி பணி சிறக்க வாழ்த்துகள்.தமிழகத்தின் கவர்னராக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி, தற்போது பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்திற்கு என் வாழ்த்துகள்.


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்:
நாகாலாந்து அமைதி பேச்சின்போது முக்கிய பங்கு வகித்த, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி, புதிய கவர்னராக நியமிக்கப்பட்டதை, அ.தி.மு.க., சார்பில் வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயம் தமிழகத்தின் வளர்ச்சியை பெரிதும் உயர்த்தும். அவரது அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்.தமிழகத்திலிருந்து செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மனமார்ந்த நன்றி. அ.தி.மு.க., உடனான நல்லுறவு மிகவும் பாராட்டத்தக்கது. பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்ட அவருக்கு வாழ்த்துகள்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பீஹாரைச் சேர்ந்த ரவி, கேரளத்தில் போலீஸ் துறை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால், தமிழகத்தை பற்றி நன்கு அறிந்திருப்பார்.அவருக்கு பா.ம.க., சார்பில் வாழ்த்துகள். இவ்வாறு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sriram - Chennai,இந்தியா
11-செப்-202123:11:28 IST Report Abuse
sriram செப்டம்பர் 2019ல் அமித் ஷா எதிரிப்பு போராட்டம், கவர்னர் மாளிகைக்கு சென்று வந்த பின் ஏன் கை விட்டார் தொளபதி. அந்த கோப்புகளெல்லாம் இன்னும் ராஜ் பவனில் தானே இருக்கும். இல்லை பன்வரிலால் புரோஹித் பஞ்சாபுக்கு எடுத்து சென்று விட்டாரா. தேச துரோகிகளுடன் ஆளும் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற, அல்லகைகள் ஏன் கூப்பாடு போடுகின்றன.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
11-செப்-202122:09:34 IST Report Abuse
Bala ஒன்னும் புடுங்க முடியாது
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
11-செப்-202122:06:18 IST Report Abuse
BALOU தமிழக அரசு இப்பொழுது பிரிவினைவாதத்தை கையில் எடுத்துள்ளது அதற்க்கு இவர்தான் சரியான கவர்னர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X